வீட்டில் உள்ள துர் தேவதைகளை விரட்டும் மணியோசை
இந்துக்கள் வீட்டில் கட்டாயம் பூஜை அறை இருக்கும்.அப்படியாக பூஜை பொருட்களில் மித முக்கியமா பொருளாக மணியோசை இடம் பெறுவதை நாம் கவனித்திருப்போம்.அதாவது பூஜை தீப ஆராதனை காண்பிக்கும் பொழுது நாம் இந்த மணியோசை எழுப்பி வழிபாடு செய்வோம்.
ஆனால் பலருக்கும் இந்த மணியோசையின் முக்கியத்துவமும் அந்த மணியோசை எழுப்புவதால் வீட்டில் ஏற்படும் நன்மைகள் பற்றியும் யாருக்கும் தெரிவதில்லை.அதை பற்றி பார்ப்போம்.
வீட்டில பூஜை செய்யும் பொழுது இந்த மணியோசை எழுப்புவதால் வீட்டில் உள்ள துர் தேவதைகள் வெளியேறுகிறது.அந்த அளவிற்கு மிகவும் சக்தி வாய்ந்தது இந்த மணியோசை ஆதலால் நாம் இந்த மணிக்கும் தனியா பூஜை செய்வது அவசியம்.
நாம் பூஜை ஆரம்பிப்பதற்கு முன்னால் மணி அடித்தால், அந்த மணி சப்தம் கேட்டதும் வீட்டில் எதாவது துர் தேவதைகள் போன்றவை இருந்தால் அது வெளியே ஓடிவிடும்.
துர்தேவதை, போன்றவைகளுக்கு மணி சப்தம் கேட்டால் பயம் அதனால், மணியடித்து அவைகளை விரட்டி விட்டு பூஜையை ஆரம்பிப்பர். ஒவ்வொரு நாளும் ஏன் இப்படி அடிக்க வேண்டும் என்றால், ஓடிப்போன துர்தேவதைகள் இருட்டிய பின் மீண்டும்ஒருவேளை வந்து விடலாம்.
இந்த துர் தேவதைகள் இருக்கும் இடத்தில் கடவுள் நடமாட்டம் இருக்காது.ஆதலால் தான் தினமும் பூஜா மணி அடிப்பதால் அந்த மணி துர் சக்திகளை முற்றிலுமாக விரட்டியடிப்பதோடு மட்டுமில்லாமல், தேவர்களையும், தேவ கணத்தினரையும் அழைக்கவே பூஜையின் போது மணியடிக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம்.
அதனால், மணியடித்துதான் தினமும் பூஜையை ஆரம்பிப்பது வழக்கம். கிராமங்களில் கூட இந்த துர்தேவதைகள் சுற்றிக் கொண்டே இருக்கும். அப்படி கோயில்களில் காலை, மாலை மணியடிக்கும் போது, இந்த சப்தம் கேட்டதும் அந்த துர்தேவதைகள் கிராமத்தை விட்டு ஓடி விடும்.
ஆதலால் இவ்வள்வு சிறப்பு மிக்க அந்த மணிக்கே பூஜை செய்யவேண்டும் என்று பூஜை முறைகள் சொல்லுகின்றன. இந்த பூஜா மணியின் அதிதேவதை வாசுதேவர் ஆவர்.மணியின் நாக்குக்கு அதிதேவதை சரஸ்வதி ஆவார்.
அடித்தல் அல்லது ஒலித்தலுக்கு அதிதேவதை சூரியனும் ,நாதத்துக்கு அதிதேவதை ஈஸ்வரன் ஆவர். எனவே , மணிக்கும் பூஜை செய்ய வேண்டும் என்கிறது சாஸ்திரம்
ஆக இவ்வளவு சக்தி வாய்ந்த மணியோசை நாம் பூஜை செய்யும் பொழுது எழுப்பி துர் தேவதைகள் விரட்டி வீட்டில் தெய்விக ஆற்றலை அதிகரிப்போம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |