சித்திரை மாதத்தில் பின்பற்ற வேண்டிய முக்கிய விரதங்களும் விசேஷங்களும்
தமிழ் மாதத்தின் முதல் மாதமான சித்திரை மாதம் மிகவும் விஷேசம் நிறைந்த மாதமாகும். அதாவது சூரிய பகவான் மேஷம் முதல் மீனம் வரை பயணிப்பதன் அடிப்படையிலேயே தமிழ் மாதங்கள் கணக்கிடப்படுகின்றன. சூரிய பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றோரு ராசிக்கு பயணம் மேற்கொள்ள 12 மாதங்கள் ஆகும்.
அதன் அடிப்படையில் தமிழ் மாதங்கள் கணக்கில் எடுத்து கொள்ளப்படுகிறது. இந்த ஆண்டு சித்திரை மாதம் ஏப்ரல் 14ம் தேதி துவங்கி, மே 14ம் தேதி வரை உள்ளது. இந்த சித்திரை மாதத்தில் பல்வேறு ஆன்மீக சிறப்பம்சம் கொண்டு நிறைந்த மாதம் ஆகும்.
மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபோகம் என பல திருவிழாக்கள் நிறைந்த மாதம் ஆகும். மேலும், மீனாட்சி திருக்கல்யாணத்தை நேரில் காண்பவர்களுக்கு பல கோடி நன்மை உண்டாகும் என்று சொல்லப்படுகிறது.
அதனால், அந்த வைபோகத்தில் கலந்து கொள்ள பலரும் மதுரைக்கு சென்று வழிபாடு செய்வார்கள். அப்படியாக, இன்னும் சித்திரை மாதத்தில் பல்வேறு விசேஷங்கள் இருக்கிறது. அந்த வகையில் நாம் சித்திரை மாதத்தில் கடைபிடிக்க வேண்டிய முக்கிய விரதங்கள் பற்றி பார்ப்போம்.
சித்திரை 2025 விசேஷ நாட்கள் :
ஏப்ரல் 14 சித்திரை 01 திங்கள் தமிழ் வருடப்பிறப்பு
ஏப்ரல் 18 சித்திரை 05 வெள்ளி புனிதவெள்ளி
ஏப்ரல் 20 சித்திரை 07 ஞாயிறு ஈஸ்டர்
ஏப்ரல் 30 சித்திரை 17 புதன் அட்சய திருதியை
மே 01 சித்திரை 18 வியாழன் தொழிலாளர் தினம்
மே 04 சித்திரை 21 ஞாயிறு அக்னி நட்சத்திரம் ஆரம்பம்
மே 08 சித்திரை 25 வியாழன் மீனாட்சி திருக்கல்யாணம்
மே 11 சித்திரை 28 ஞாயிறு கள்ளழகர் எதிர்சேவை
மே 12 சித்திரை 29 திங்கள் சித்ரா பெளர்ணமி, கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குதல்
சித்திரை 2025 விரத நாட்கள் :
அமாவாசை ஏப்ரல் 27 சித்திரை 14 ஞாயிறு
பெளர்ணமி மே 12 சித்திரை 29 திங்கள்
கிருத்திகை ஏப்ரல் 29 சித்திரை 16 செவ்வாய்
திருவோணம் ஏப்ரல் 21 சித்திரை 08 திங்கள்
ஏகாதசி ஏப்ரல் 24,மே 08 சித்திரை 11,சித்திரை 25 வியாழன்
சஷ்டி ஏப்ரல் 19 மே 03 சித்திரை 06 சித்திரை 20 சனி
சங்கடஹர சதுர்த்தி ஏப்ரல் 16 சித்திரை 03 புதன்
சிவராத்திரி ஏப்ரல் 26 சித்திரை 13 சனி
பிரதோஷம் ஏப்ரல் 25 மே 10 சித்திரை 12 சித்திரை 27 வெள்ளி சனி
சதுர்த்தி மே 01 சித்திரை 18 வியாழன்
சித்திரை 2025 சுப முகூர்த்த நாட்கள் :
ஏப்ரல் 16 சித்திரை 03 புதன் தேய்பிறை முகூர்த்தம்
ஏப்ரல் 18 சித்திரை 05 வெள்ளி தேய்பிறை முகூர்த்தம்
ஏப்ரல் 23 சித்திரை 10 புதன் தேய்பிறை முகூர்த்தம்
ஏப்ரல் 25 சித்திரை 12 வெள்ளி தேய்பிறை முகூர்த்தம்
ஏப்ரல் 30 சித்திரை 17 புதன் வளர்பிறை முகூர்த்தம்
மே 04 சித்திரை 21 ஞாயிறு வளர்பிறை முகூர்த்தம்
மே 09 சித்திரை 26 வெள்ளி வளர்பிறை முகூர்த்தம்
மே 11 சித்திரை 28 ஞாயிறு வளர்பிறை முகூர்த்தம்
மே 14 சித்திரை 31 புதன் வளர்பிறை முகூர்த்தம்
சித்திரை 2025 வாஸ்து நாள் மற்றும் நேரம் :
ஏப்ரல் 23 சித்திரை 10 புதன் காலை 08.54 முதல் 09.30 வரை
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |