2026: 12 ராசிகளும் எடுக்கவேண்டிய முக்கிய தீர்மானங்கள் என்ன?
2026 புது வருடம் நாளை பிறக்கிறது. அப்படியாக ஒவ்வொருவரும் தங்களுடைய வாழ்க்கை வளர்ச்சி அடைய நிறைய விஷயங்கள் அவர்கள் மாற்றி அமைக்க வேண்டும் என்று யோசித்து அவர்களை தயார் நிலையில் வைத்துக் கொண்டிருப்பார்கள்.
அப்படியாக 12 ராசிகளும் 2026 ஆம் ஆண்டு அவர்கள் என்ன தீர்மானங்கள் எடுத்தால் அவர்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய அளவில் வெற்றி அடையலாம் என்பதை பற்றி பார்ப்போம்.

மேஷம்:
இந்த ஆண்டு இவர்கள் தொழில் ரீதியாக முன்னேற அவர்களுடைய சௌகரியமான நிலையை முதலில் விட்டுக் கொடுக்க வேண்டும் என்று அவர்கள் தீர்மானம் செய்ய வேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் அடுத்தடுத்து உயர்ந்த நிலைக்கு செல்வார்கள்.
ரிஷபம்:
இந்த ஆண்டு இவர்கள் தொழில் ரீதியாக முன்னேற்றம் அடைய கவனச் சிதறல் இல்லாமல் இலக்கை அடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்பட வேண்டும் என்று தீர்மானம் எடுத்தால் நிச்சயம் வெற்றி இவர்களுக்கு உண்டு.
மிதுனம்:
இந்த ஆண்டு இவர்கள் சுயநலமாக சில முக்கியமான முடிவுகளை எடுத்தால் மட்டுமே இவர்களுக்கு உரிய சந்தோஷம் இவர்களை வந்து சேரும். சுற்றி உள்ள மூன்றாம் நபர்களுடைய வார்த்தைகளை இவர்கள் கேட்பதை குறைத்துக் கொள்ளலாம்.
கடகம்:
இந்த ஆண்டு பொன்னான ஆண்டாக அமைய பிறருடன் இவர்களுடைய வாழ்க்கையை ஒப்பிட்டு பார்க்காமல் தங்களுடைய கடமையை செய்ய வேண்டும் என்று தீர்மானம் செய்தார்கள் என்றால் மன அழுத்தம் குறையும்.
சிம்மம்:
எந்த ஒரு நிலையிலும் இவர்கள் ஆடம்பர செலவுகளை செய்யாமல் இருந்தாலே கடன் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவார்கள். மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு பணம் பொருட்டல்ல என்ற ஒரு தீர்மானத்தை இவர்கள் எடுத்து விட்டார்கள் என்றால் பாதி பிரச்சனை குறையும்.
கன்னி:
பிறருடைய கருத்துக்களுக்கும் செவி சாய்க்க வேண்டும் என்ற ஒரு எண்ணம் இவர்களிடத்தில் வந்துவிட்டால் இவர்களுக்கு எதிரிகளே இருக்க மாட்டார்கள். ஆக அமைதியாக எல்லா சூழ்நிலையும் கையாள வேண்டும் என்ற தீர்மானம் எடுத்துக் கொண்டால் மகிழ்ச்சி உண்டாகும்.
துலாம்:
தேவையில்லாத குழப்பங்களையும் சிந்தனைகளையும் இவர்கள் தன்னுள் வைத்துக் கொண்டு வருந்துவதை நிறுத்த வேண்டும் என்று இவர்கள் முதலில் தீர்மானம் செய்து விட்டார்கள் என்றால் இவர்கள் வாழ்கையில் எந்த ஒரு பிரச்சனையுமே இல்லை.
விருச்சிகம்:
அழகு சார்ந்த விஷயங்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றோமோ அந்த அளவிற்கு நம்முடைய ஆரோக்கியத்திற்கும் நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று தீர்க்கமான எண்ணம் இவர்கள் மனதில் பதிந்து விட்டால் பாதிப்புகளிலிருந்து காத்துக் கொள்ளலாம்.
தனுசு:
இவர்கள் இந்த வருடம் விட வேண்டிய முக்கியமான ஒன்று இவர்களுடைய பிடிவாதம். தங்களுடைய வீண் பிடிவாதத்தை இவர்கள் விட்டுவிட வேண்டும் என்று தீர்மானம் செய்து விட்டால் எல்லோராாலும் விரும்பக் கூடய நபராக மாறிவிடுவீர்கள்.
மகரம்:
முன் கோபத்தை மட்டும் குறைத்துக் கொண்டால் நம்மை மிஞ்சுவதற்கு எவரும் இல்லை என்ற ஒரு எண்ணத்தை இவர்கள் மனதில் பதித்துக் கொண்டாலே இவர்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்து விடுவார்கள்.
கும்பம்:
சிறு சிறு விஷயங்களுக்கும் பெரிய அளவில் தேவை இல்லாத சிந்தனையால் தவறான முடிவுகள் எடுத்து தப்பாக செல்வதை நிறுத்த வேண்டும். இவர்கள் இந்த ஒரு தீர்மானம் செய்து கொண்டால் மனதில் நிம்மதி பிறக்கும்.
மீனம்:
நம்மால் எதையும் மாற்ற முடியாது எல்லாம் இறைவனுடைய செயல் என்ற ஒரு எண்ணம் மட்டும் இவர்கள் மனதில் பதித்துக் கொண்டு இந்த தீர்மானத்தோடு இந்த ஆண்டு தொடங்கினார்கள் என்றால் நிச்சயம் நல்ல காலம் பிறக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |