2026: கட்டாயம் தெரிந்துக்கொள்ள வேண்டிய வைகாசி மாதத்தின் சிறப்புகள்

By Sakthi Raj May 15, 2026 10:16 AM GMT
Report

தமிழ் மாதம் ஒவ்வொரு மாதத்திற்கும் தனி சிறப்புகள் இருக்கிறது. அப்படியாக இந்த வைகாசி மாதம் தெய்வீக அவதாரங்கள் அதிகம் நிகழ்த்த மாதமாகவும் பாவ நிவர்த்தி கொடுக்கக் கூடிய மாதமாகவும் செல்வ வளம் பெறுக கூடிய மாதமாகவும் தெய்வீக அருளை மிக எளிதில் பெறக்கூடிய மாதமாகவும் இந்த வைகாசி மாதம் இருக்கிறது.

இந்த மாதத்தை நாம் "மாதவ மாதம்" வைகாசி மாதம் " என்றும் சாஸ்திரங்கள் போற்றுகின்றன. அப்படியாக, வைகாசி மாதத்தில் செய்யப்படுகின்ற தான தர்மங்கள், மேற்கொள்ளக்கூடிய விரதங்கள் ஆகியவை மனித வாழ்க்கையில் மிகப்பெரிய அளவில் செல்வங்களையும் மன அமைதியையும் பெற்றுக் கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது.

2026: கட்டாயம் தெரிந்துக்கொள்ள வேண்டிய வைகாசி மாதத்தின் சிறப்புகள் | Important Things We Must Know About Vaikasi Month

வைகாசி முதல் நாள் செய்ய வேண்டியவை:

வைகாசி முதல் நாளில் கங்கையில் நீராடினால் ஏழேழு ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகும் என்பது நம்பிக்கை. மேலும், எல்லோராலும் கங்கைக்கு சென்று புனித நீராடுதல் செய்ய முடியாது. அவர்கள் வீட்டில் கங்கை ஜலம் சேர்த்து நீராடினாலும் புண்ணியம் கிடைக்கிறது.

மேலும், வைகாசி மாதத்தில் மகாவிஷ்ணுவை துளசி இலைகள் கொண்டு பூஜை செய்து வழிபாடு செய்தால் எல்லா செல்வமும் கிடைக்கப்பெற்று நாம் மகிழ்ச்சியாக வாழ்வோம் என்று விஷ்ணு புராணத்தில் சொல்லப்படுகிறது. வைகாசி மாதத்தில் பெருமாள் தரிசனம், துளசி அர்ச்சனை எள் தானம் செய்வது மிக சிறந்த பலனை கொடுக்கும்.

நீங்கள் எப்படிப்பட்ட மனிதராக வாழப்போறீங்க? இந்த கதையின் இறுதியில் முடிவு செய்யுங்கள்

நீங்கள் எப்படிப்பட்ட மனிதராக வாழப்போறீங்க? இந்த கதையின் இறுதியில் முடிவு செய்யுங்கள்

தெய்வங்களின் அவதாரங்கள்:

வைகாசி பௌர்ணமி தினத்தில் தான் சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து ஆறு தீப்பொறிகள் வெளிப்பட்டன. அவை சரவணன் பொய்கையில் ஆறு குழந்தைகளாக தோன்றியன. அந்த குழந்தை ஆறு கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டு பின்னர் பார்வதி தேவி அவற்றை ஒன்றிணைத்தார்.

இதனால் முருகப்பெருமானுக்கு கந்தன் என்கின்ற பெயர் உண்டாயிற்று. முருக பெருமான் அவதரித்த விசாக நட்சத்திரத்தில் வருவதையே நாம் வைகாசி விசாகம் என்று கொண்டாடுகின்றோம். அன்றைய தினம் முருகப்பெருமான் நினைத்து விரதம் இருந்து வழிபாடு செய்தால் மிகப்பெரிய புண்ணியங்கள் கிடைக்கும்.அதேபோல் வைகாசி மாதம் சுக்ல பட்ச சதுர்த்தசி நாளில் தான் மகாவிஷ்ணு பிரகலாதனை காப்பாற்ற நரசிம்ம அவதாரம் எடுத்தார்.

இந்த அவதாரம் தன்னுடைய பக்தரை காப்பாற்ற இறைவன் எந்த உருவத்திலும் அவதாரம் எடுப்பார் என்பதை நமக்கு எடுத்துக்காட்டுவதாக அமைகிறது.

2026: கட்டாயம் தெரிந்துக்கொள்ள வேண்டிய வைகாசி மாதத்தின் சிறப்புகள் | Important Things We Must Know About Vaikasi Month

கும்ப ராசியினர் இவர்களுடன் மிகவும் கவனமாக இருக்க வேண்டுமாம்? யார் தெரியுமா ?

கும்ப ராசியினர் இவர்களுடன் மிகவும் கவனமாக இருக்க வேண்டுமாம்? யார் தெரியுமா ?

புத்தர் ஞானம் பெற்ற புனித நாள்:

வரலாற்றின் அடிப்படையில் கௌதம புத்தர் அவதரித்ததும் போதி மரத்தடியில் அவர் ஞானம் பெற்றதும் வைகாசி பௌர்ணமி நாளில் தான் என்று சொல்லப்படுகிறது. அதனால், உலகம் முழுவதும் உள்ள புத்த மதத்தினர் வைகாசி பௌர்ணமி தினத்தில் வைகாசி பௌர்ணமி புனித நாளாக போற்றிக் கொண்டாடுகின்றன.

இதனை புத்த பூர்ணிமா என்றும் அழைக்கின்றனர். மேலும், மகா பெரியவர் ஆதிசங்கரர் அவதரித்த மாதமும் இந்த வைகாசி மாதம் தான். அதோடு சிவபெருமானின் 63 நாயன்மார்களில் ஒருவரான திருஞானசம்பந்தர் வைகாசி மாதம் மூல நட்சத்திரத்தில் அவதரித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புராணங்களில் படி எமதர்மராஜா வைகாசி விசாக நாளில் தான் அவதரித்தார் என்று சொல்லப்படுகிறது. அதனால், திருப்பைஞ்ஞீலி, ஸ்ரீவாஞ்சியம் போன்ற ஆலயங்களுக்கு சென்று இத நாளில் வழிபாடு செய்தால் சிறந்த பலன்கள் கிடைக்கும்.

அதே போல். வைகாசி மாதம் சிவபெருமான் பார்வதி தேவி திருமணம் நடைபெற்ற புனித மாதம் என்றும் சொல்லப்படுகிறது. முக்கியமாக வைகாசி மாதத்தில் ஸ்ரீ ராமர் மற்றும் அனுமானை வழிபாடு செய்தால் வாழ்க்கையில் சந்திக்கக்கூடிய கஷ்டங்கள் யாவும் விலகி மன நிம்மதி கிடைத்து எதையும் போராடி வெல்லக்கூடிய வலிமை பிறக்கும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


 

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US