2026: சனிபகவானுடைய பாதிப்பிலிருந்து விடுதலை பெறப்போகும் ராசிகள்
கிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகம் என்றால் அது சனி பகவான் தான். ஒருவர் இறைவனிடமிருந்து கூட தப்பித்து விடலாம் ஆனால் சனி பகவானிடம் இருந்து தப்பிக்கவே முடியாது. அந்த அளவிற்கு சனி பகவான் நீதிமானாக இயங்கக்கூடியவர்.
அதனால் சனி பெயர்ச்சி என்றாலே எல்லோருக்கும் மனதில் அச்சம் வந்துவிடும். அப்படியாக, 2026 ஆம் ஆண்டு சனி பகவான் மீன ராசியில் சஞ்சரிக்க உள்ளார். 2026 ஆம் ஆண்டு முழுவதுமே மீன ராசியில் சனி பகவான் பயணம் செய்ய இருக்கிறார். இதன் காரணமாக எந்த ராசியினர் சனி பகவானுடைய ஆசீர்வாதம் பெற்று நன்மையை பெற காத்திருக்கிறார்கள் என்று பார்ப்போம்.

ரிஷபம்:
ரிஷப ராசியினருக்கு சனிபகவானுடைய இந்த இடமாற்றமானது இவர்களுக்கு தொழில் ரீதியாக மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றுக் கொடுக்கப் போகிறது.
அதனால் பொருளாதார ரீதியாக இவர்கள் எதிர்பாராத அளவில் மிகப் பெரிய வளர்ச்சியை அடையப் போகிறார்கள். ஒரு சிலருக்கு நீண்ட நாள் கனவுகள் எதிர்பாராத நேரத்தில் நிறைவேறி அவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.
கன்னி:
கன்னி ராசிக்கு சனிபகவானுடைய இந்த சஞ்சாரமானது அவர்களுக்கு வாழ்க்கையில் இருந்து வந்த மன அழுத்தங்களிலிருந்து விடுதலை கொடுக்கப் போகிறது. இவர்கள் அரசு தொடர்பாக நிறைய ஆதாயங்களை பெறப் போகிறார்கள்.
எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் எல்லாம் விலகப் போகிறது. உடல் ரீதியாக நீண்ட நாட்களாக துன்பத்தை சந்தித்து வந்தவர்கள் அதிலிருந்து நல்ல மாற்றம் பெற போகிறார்கள்.
தனுசு:
தனுசு ராசியினருக்கு சனி பகவானுடைய இந்து சஞ்சாரமானது இவர்களுக்கு மன அழுத்தத்திலிருந்து ஒரு நல்ல நிம்மதியான மனநிலையை கொடுக்கப் போகிறது. பிள்ளைகளால் இவர்களுக்கு இந்த காலகட்டங்களில் பெயரும் புகழும் கிடைக்கப் போகிறது. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.
சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கக்கூடிய யோகம் கிடைக்கும். குடும்பத்துடன் இவர்கள் வெளிநாடு அல்லது வெளியூர் சுற்றுலா பயணம் சென்று மகிழ்ச்சியான நேரத்தை செலவிட கூடிய அற்புதமான காலமாக அமைய போகிறது.
கும்பம்:
கும்ப ராசியினருக்கு சனி பகவானுடைய இந்த சஞ்சாரமானது இவர்களுக்கு போதும் போதும் என்ற அளவுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போகிறார். எந்த துறையில் தங்கள் கால் பதித்தாலும் அதில் இவர்கள் வெற்றி பெற்று விடுவார்கள்.
திருமண கனவுகள் இவர்களுக்கு இந்த ஆண்டு நிச்சயம் நிறைவேறும். தொழில் ரீதியாக கூட்டாளிகளுடன் ஏற்பட்ட மன கசப்புகள் எல்லாம் விலகி ஒரு நல்ல வளர்ச்சியை சந்திக்கப் போகிறார்கள். சமுதாயத்தில் இழந்த மதிப்புகளை மீண்டும் பெற காத்திருக்கிறார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |