இன்றைய ராசி பலன்(11-04-2025)
மேஷம்:
இன்று உங்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். சிலருக்கு வெளியூர் செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும். ஒன்றுக்கும் மேற்ப்பட்ட பிரச்சனைகளை சரி செய்வீர்கள். நன்மையான நாள்.
ரிஷபம்:
வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் சரி ஆகும். இன்று உங்களுக்கு சாதகமான நாள் ஆகும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். பூர்விக சொத்தில் உள்ள சங்கடங்கள் விலகும்.
மிதுனம்:
திடீர் வேலை பளுவால் உங்களுக்கு மன சங்கடம் ஏற்படும். நினைத்தது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும். சிலருக்கு மதியம் மேல் தாய் வழி உறவால் கருத்து வேறுபாடு உண்டாகலாம்.
கடகம்:
இன்று நெருங்கிய நபருடன் சில சண்டைகள் உண்டாகும். எதையும் தீர்க்கமாக யோசித்து செயல்படுவீர்கள். பிள்ளைகள் வழியில் நல்ல ஆதாயம் உண்டாகும். நன்மையான நாள்.
சிம்மம்:
பிள்ளைகளால் சில மன சங்கடம் உண்டாகும். வியாபாரத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். உடல் ஆரோக்கியம் முன்னேற்றம் அடையும். சாதகமான நாள்.
கன்னி:
உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர். செயல்களில் சங்கடம் உண்டாகும். மனதில் குழப்பம் அதிகரிக்கும். முயற்சிகள் இன்று இழுபறியாகும்.
துலாம்:
காலையில் சில நற்செய்திகள் உங்களை தேடி வரலாம். இன்று உங்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை முடிப்பீர்கள். வீண் அலைச்சல் உண்டாகும்.
விருச்சிகம்:
வியாபாரத்தில் இருந்த சங்கடம் நீங்கும். பணியாளர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உங்கள் முயற்சியில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வரவேண்டிய பணம் வரும். யோசித்து செயல்படுவதால் வெற்றி கிடைக்கும்.
தனுசு:
இன்று மனதில் கடந்த கால பிரச்சன்னைகள் பற்றி சில சிந்தனைகள் மேலோங்கும். ஒரு சிலருக்கு மதியம் மேல் உடல் உபாதைகள் உண்டாகும். நீண்ட நாள் கைக்கு வராத பணம் உங்கள் கைக்கு வந்து சேரும்.
மகரம்:
நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். பெரியோரை சந்தித்து உதவிகள் பெறுவீர். தடைபட்ட வேலை நடந்தேறும். உங்கள் முயற்சிக்கு தந்தைவழி உறவுகள் ஆதரவு கிடைக்கும்.
கும்பம்:
எதிர்பார்த்த பணம் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். இயந்திரப் பணியில் எச்சரிக்கை அவசியம். வாக்கு வாதங்களை தவிர்ப்பது நன்மையாகும். உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும்.
மீனம்:
உங்கள் எதிர்பார்ப்பு விரைவில் நிறைவேறும். ஒரு சிலருக்கு கூட்டு தொழிலில் இருந்த சங்கடம் விலகும். கணவன் மனைவி இடையே நல்ல அன்யோன்யம் உருவாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |