இன்றைய ராசி பலன்(16-04-2025)
மேஷம்:
இன்று உங்கள் வீட்டிற்கு விருந்தினர் வருகையால் மனதில் சந்தோசம் உண்டாகும். எதையும் துணிந்து செய்வீர்கள். ஒரு சிலருக்கு வேலையில் பாராட்டுக்கள் கிடைக்கும். கோபத்தை கட்டுப்பாட்டுக்குள் வைப்பது நன்மை தரும்.
ரிஷபம்:
இன்று நண்பர்களுடன் வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். தொழில் விஷயங்களில் வெற்றிகள் உண்டாகும். நேற்று வரை மனதை வருடிய காரியம் ஒன்று விலகி செல்லும்.
மிதுனம்:
நீண்ட நாள் இழுபறியாக இருந்த பிரச்சனை ஒன்று நல்ல முடிவை பெரும். சிறு சிறு உடல் உபாதைகள் தோன்றி மறையும். எதையும் நிதானமாக யோசித்து செயல்பட்டால் நன்மை உண்டாகும்.
கடகம்:
மனதில் தேவை இல்லாத விஷயங்களை போட்டு குழப்பி கொள்ள வேண்டாம். பிள்ளைகளை எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். ஒரு சிலருக்கு குடும்பத்துடன் சுற்றுலா செல்லும் வாய்ப்புகள் உருவாகும்.
சிம்மம்:
உங்கள் முயற்சியால் சிக்கல் அனைத்தையும் சரிசெய்வீர். செலவு செய்து பிரச்னைக்கு தீர்வு காண்பீர். அலைச்சல் அதிகரிக்கும். வேலைபளுவால் சங்கடம் உண்டாகும்.
கன்னி:
கடந்த வாழ்க்கையை பற்றி நினைத்து பார்ப்பீர்கள். கல்வி தொடர்பான விஷயங்களில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அலுவலகத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள்.
துலாம்:
எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். பிறருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். ஒரு சிலருக்கு தாய் உறவுகளிடம் சண்டை உண்டாகலாம். மனதில் கவலைகள் உருவாகும்.
விருச்சிகம்:
வேலைபளு அதிகரிக்கும். ஒரு சிலருக்கு பணிபுரியும் இடத்தில் பிரச்னை உண்டாகும். அமைதி காப்பது நல்லது. வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். பண வரவு அதிகரிக்கும். குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்படுவீர்கள்.
தனுசு:
வண்டி வாகனத்தில் கவனமாக இருக்க வேண்டும். பிள்ளைகளிடம் வீண் வாக்குவாதம் தவிர்க்கவும். ஒரு சிலருக்கு மனதில் சில கவலைகள் உருவாகும். இழுபறியாக திட்டம் நிறைவேறும்.
மகரம்:
நேற்றைய நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த பணம் வரும். செயல் வெற்றியாகும். பொருளாதார நிலை உயரும். நண்பர்கள் ஆதரவால் உங்களுக்கு இருந்த பிரச்னை விலகும். பண வரவு அதிகரிக்கும். தாராளமாக செலவு செய்வீர்.
கும்பம்:
பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். வியாபாரத்தை விரிவு செய்யும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வேலையாட்கள் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பணவரவில் உண்டான தடை விலகும்.
மீனம்:
இன்று ஒரு முக்கியமான வேலை திட்டமிட்டபடி செயல்பட பதட்டம் தோன்றும். மனதில் இருந்த குழப்பம் அகலும். வியாபாரத்தில் இருந்த தடை அகலும். கன்னி தெய்வ வழிபாடு நண்மையை தரும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |