இன்றைய ராசி பலன்(18-11-2025)
மேஷம்:
ஒரு சிலருக்கு இன்று மனதில் காலை முதல் குழப்பங்கள் தோன்றி மறையலாம். வெளியூர் செல்ல வேண்டும் என்று திட்டமிட்டு இருப்பவர்களுக்கு சில தடைகள் வரலாம். கவனமாக பேச வேண்டிய நாள்.
ரிஷபம்:
தொழில் வாழ்க்கையில் இன்று நீங்கள் சிறந்து விளங்குவீர்கள். உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு சில நன்மைகள் நடக்கும். பண விஷயங்களில் மிகவும் கவனம் தேவை. நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்.
மிதுனம்:
இன்று உங்கள் ஆரோக்கியத்தில் முழுமையான கவனம் செலுத்த வேண்டும். பெற்றோர்கள் ஆலோசனை கேட்டு நடப்பீர்கள். திருமணம் தொடர்பான விஷயங்களில் முக்கிய முடிவுகள் எடுக்கும் நாள்.
கடகம்:
தொழில் ரீதியாக யாருக்கும் முக்கிய வாக்குகள் கொடுக்காதீர்கள். மனதில் உள்ள குழப்பங்கள் மறையும் நாள். சிலரின் உண்மை முகம் அறிந்து செயல்படுவீர்கள். குடும்பத்தில் மதிப்பு உயரும் நாள்.
சிம்மம்:
இன்று ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு செலுத்துவீர்கள். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் உதவிகள் கிடைக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு narபெயர் கிடைக்கும் நாள்.
கன்னி:
குடும்பத்தினரிடம் தேவை இல்லாத வாக்குவாதங்கள் செய்யாதீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்கள் ஆலோசனை கேட்டு நடப்பார்கள். மனதில் உள்ள கவலை விலகும். நன்மை உண்டாகும் நாள்.
துலாம்:
உங்களை பற்றி நீங்கள் முழுமையாக புரிந்து கொள்ளும் நாள். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கான மதிப்பு உயரும். திருமண தொடர்பான விஷயங்களில் உள்ள சிக்கல்கள் விலகும்.
விருச்சிகம்:
இன்று ஒரு சிலருக்கு ஏதிர்பாராத மருத்துவ செலவுகள் வரலாம். மனம் தளராமல் நம்பிக்கையோடு இருப்பீர்கள். துணை வழியில் உங்களுக்கு நினைத்த உதவிகள் கிடைக்கும் நாள்.
தனுசு:
மனதில் மகிழ்ச்சி உண்டாகும் நாள். குடும்பத்தில் விருந்தினர் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பாராத நற்செய்தி வந்து சேரும். பிள்ளைகள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும் நாள்.
மகரம்:
இன்று நீங்கள் வாழ்க்கையை ரசித்து வாழ்வீர்கள். மனதில் உள்ள பாரம் குறையும். தொழில் ரீதியாக நீங்கள் எதிர்பார்த்த விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். நன்மையான நாள்.
கும்பம்:
இன்று உங்களுக்கு பிடிக்காத ஒரு நபரின் உறவை முறித்துக் கொள்வீர்கள். சற்று சுயநலமாக இருக்க வேண்டிய நாள். சிலர் ஆலய வழிபாடுகளில் பங்கு கொள்வீர்கள். உண்மை புரிந்து கொள்ளும் நாள்.
மீனம்:
இன்று உங்களுக்கு வழக்கு விஷயங்கள் எல்லாம் சாதகமாக அமையும். புதிய நட்புகளின் அறிமுகம் கிடைக்கும் நாள். வேலையில் நல்ல மாற்றமும் முன்னேற்றமும் பெரும் நாள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |