இன்றைய ராசி பலன்(11-05-2025)

Report

 மேஷம்:

இன்று வாழ்க்கை துணையுடன் உண்டான பிரச்சனை நல்ல முடிவை பெரும். ஒரு சிலருக்கு வெளியூர் பயணம் மற்றும் வேலை செய்யும் இடங்களில் சில சிக்கலை சந்திக்கலாம்.

ரிஷபம்:

இன்று உங்களை பற்றிய பெருமையை யாரிடமும் பேசாதீர்கள். தாய் வழி உறவால் எதிர்பாராத சில சிக்கல் உண்டாகும். முடிந்த அளவு இன்று அமைதி காப்பது பல வகையில் நன்மைகளை தேடிக்கொடுக்கும்.

மிதுனம்:

கடந்த கால தவறை நினைத்து மனம் வருந்துவீர்கள். இன்று நீங்கள் சில தவறான முடிவுகளை எடுக்க வாய்ப்புகள் உள்ளது. சில நண்பர்கள் வழியாக உங்களுக்கு நன்மை நடக்கும்.

கடகம்:

 எதிர்பார்த்த வருமானம் இழுபறியாகும் என்றாலும் போராடி சாதிப்பீர். சுப நிகழ்ச்சியில் பங்கேற்பீர். வியாபாரத்தில் போட்டிகளை சந்திப்பீர்கள் என்றாலும் உங்கள் அணுகுமுறையால் ஆதாயமடைவீர்.

சிம்மம்:

இன்று உங்கள் மனதில் நீண்ட நாட்களாக ஏற்பட்ட குழப்பம் விலகும். பிறரால் செய்ய முடியாத வேலையை நீங்கள் துணிச்சலாக செய்து முடிப்பீர்கள். சமுதாயத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.

கன்னி:

எடுக்கும் முயற்சியில் முன்னேற்றம் காணும் நாள். கொடுத்த வாக்கை காப்பற்ற போராடுவீர்கள். குடும்பத்தில் பெரியவர்களின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

துலாம்:

இன்று சிலருக்கு உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. மனம் மிகுந்த குழப்பம் அடையும். உங்களை விட்டு பிரிந்து சென்ற நபர் மீண்டும் உங்களை தேடி வருவார்கள். நன்மையான நாள்.

அரச மரத்தை மறந்தும் இந்த நாட்களில் வழிபாடு செய்யாதீர்கள்

அரச மரத்தை மறந்தும் இந்த நாட்களில் வழிபாடு செய்யாதீர்கள்

விருச்சிகம்:

தொலைந்துபோன பொருள் கிடைக்கும்அனுஷம்: வாகன வகையில் செலவுகள் ஏற்படும். புதிய முதலீடுகளை தவிர்ப்பதும், இயந்திரப் பணியில் கவனமாக செயல்படுவதும் அவசியம்.

தனுசு:

நீங்கள் வாங்கிய பழைய கடன்களை அடைப்பீர்கள். ஒரு சிலருக்கு தொழிலில் லாபமும் முன்னேற்றமும் கிடைக்கும். குரு பார்வை உங்கள் ராசியில் விழுவதால் பல நன்மைகள் உண்டாகும்.

மகரம்: 

வியாபாரத்தை விரிவு செய்வதற்காக எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். உங்கள் அணுகுமுறையால் நீண்டநாள் பிரச்னை ஒன்று முடிவிற்கு வரும். முயற்சி வெற்றியாகும்.

கும்பம்: 

பெரியோர் ஆதரவால் திட்டமிட்டிருந்த வேலைகள் நடந்தேறும். பணப் புழக்கம் கூடும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். நினைத்ததை நடத்தி முடிப்பீர். தந்தை வழி உறவுகளால் ஆதாயம் ஏற்படும்.

மீனம்:

இன்று பலரின் உண்மை முகம் உங்களுக்கு தெரிய வரும். உங்கள் மனதில் நீங்கா வலியும் வேதனையும் உண்டாக வாய்ப்புகள் உள்ளது. வேலை செய்யும் இடத்தில் வீண் வாக்கு வாதம் செய்வதை தவிர்க்கவும்.     

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US