இன்றைய ராசி பலன்(27-05-2025)

Report

மேஷம்:

இன்று நீங்கள் புதிய முயற்சிகளை எடுப்பீர்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்கள் உங்களை புரிந்து கொள்வார்கள். பதட்டத்துடன் சில காரியம் செய்வதை தவிர்க்க வேண்டும்.

ரிஷபம்:

தேவை இல்லாத மன குழப்பத்திற்கு ஆளாக வேண்டாம். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு எதிராக சிலர் செயல்பட வாய்ப்புகள் உள்ளது. வாழ்க்கையில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகி செல்லும்.

மிதுனம்:

இன்று மனதில் விரக்தி உண்டாகும். குடும்பத்தில் தேவை இல்லாத பிரச்சனைகள் உருவாகும். சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் உருவாகும். பிறரை அனுசரித்து செல்வதால் லாபம் உண்டாகும்.

கடகம்:

விருப்பம் நிறைவேறும். நண்பர்கள் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். பெரியோர் ஆதரவால் முயற்சி வெற்றியாகும்.

சிம்மம்:

இன்று வியாபாரத்தில் உங்கள் செயல்களுக்கு ஏற்ற வருமானம் கிடைக்கும். குழந்தைகள் உடல்நலனில் அக்கறை செலுத்த வேண்டும். சுறுசுறுப்பாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள்.

கன்னி:

மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் விலகி செல்லும். பணி செய்யும் இடத்தில் உங்களுக்கான மரியாதை கூடும். சகோதரன் சகோதரி வழியில் நல்ல ஆதரவு கிடைக்கும். இறைவழிபாடு நன்மை தரும்.

துலாம்:

இன்று எதிர்காலம் பற்றிய முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். சிலருக்கு வேலை பளு அதிகரிக்கும். உங்களை குடும்பத்தினர் புரிந்து நடந்து கொள்வார்கள். உடல் நிலையில் சில சங்கடங்கள் தோன்றலாம்.

சாணக்கிய நீதி: வாழ்க்கையில் வெற்றி பெற நாம் முதலில் விட்டுவிட வேண்டிய 5 பழக்கங்கள்

சாணக்கிய நீதி: வாழ்க்கையில் வெற்றி பெற நாம் முதலில் விட்டுவிட வேண்டிய 5 பழக்கங்கள்

விருச்சிகம்:

குடும்பத்தினர் விருப்பத்தை பூர்த்தி செய்வீர்கள். வரவேண்டிய பணம் வரும். மனக்குழப்பம் விலகும். விருப்பம் நிறைவேறும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகளை சரி செய்வீர்.

தனுசு:

இன்று பிள்ளைகள் எதிர்காலம் பற்றிய பயமும் பதட்டமும் உண்டாகும். குடும்பத்தில் சில சிக்கல்கள் தோன்றி மறையும். வெளியூர் பயணம் ஆதாயமாக அமையும். இறைவழிபாடு நன்மை அளிக்கும்.

மகரம்:

இழுபறியாக இருந்த வேலை முடியும். செல்வாக்கு உயரும். உடல்நிலையில் கவனமாக இருப்பது அவசியம். உங்கள் எண்ணம் நிறைவேறும். முயற்சி வெற்றியாகும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும்.

கும்பம்:

தாய்வழி உறவினரால் லாபம் காண்பீர்.சதயம்: அலைச்சல் அதிகரிக்கும். நினைத்ததை சாதிப்பீர்கள். மறைமுக எதிரிகளால் ஏற்பட்ட சங்கடம் விலகும். தேவைகள் பூர்த்தியாகும்.

மீனம்:

இன்று சில உண்மை முகங்களை தெரிந்து கொள்வீர்கள். பிள்ளைகள் உங்களுக்கு துணையாக இருப்பார்கள். உங்களின் முயற்சி வெற்றியை கொடுக்கும். மனதில் தெளிவு உண்டாகும். எதிர்பார்த்த வருமானம் வந்து சேரும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US