இன்றைய ராசி பலன்(09-05-2025)
மேஷம்:
இன்று முக்கியமான சுப நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள். ஒரு சிலருக்கு வேலையில் எதிர்பாராத சிக்கல்கள் உண்டாகும். உடல் நிலையில் கவனமாக இருக்க வேண்டும்.
ரிஷபம்:
பிள்ளைகளால் உங்களுக்கு வளர்ச்சி உண்டாகும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் எல்லாம் விலகும். பிறரின் குணம் அறிந்து செயல்படுவது நன்மையை தரும். மனதை ஒரு நிலையாக வைத்து கொள்ள தியானம் மேற்கொள்ளலாம்.
மிதுனம்:
வீண் வம்பு வழக்குகளில் சிக்க வேண்டாம். பெற்றோர்கள் உங்கள் ஆலோசனை கேட்டு நடப்பார்கள். தீர்வு பெறாது என்று எண்ணிய பிரச்சனை நல்ல முடிவை பெரும். ஆடம்பர செலவை தவிர்க்கவும்.
கடகம்:
உங்களின் பொருளாதார நிலை உயரும். குடும்பத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் விலகி செல்லும். மனதில் உண்டான குழப்பங்கள் அகலும். ஒரு சிலருக்கு வெளியூர் செல்லும் வாய்ப்புகள் உண்டாகும்.
சிம்மம்:
எதையும் திட்டமிட்டு செயல்படுவதால் நன்மை உண்டாகும். இழுபறியாக இருந்த வேலை ஒன்று விரைவில் முடிவை பெரும். வியாபாரம் சிறந்த முன்னேற்றம் அடையும். தந்தையின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
கன்னி:
மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். மனதில் இருந்த கவலைகளும் பாரமும் குறையும். சிலருக்கு குடும்பத்துடன் சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்புகள் கிடைக்கும்.
துலாம்:
ஆடம்பர செலவுகள் செய்வதை தவிர்க்க வேண்டும். நீண்ட நாட்களாக மனதில் இருந்த குழப்பம் அகலும். நேற்று வரை சந்தித்த பிரச்சனை ஒன்று நல்ல முடிவை பெரும்.
விருச்சிகம்:
நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும். நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்தவரை சந்திப்பீர்கள். கடனாக கொடுத்த பணம் கைக்கு வரும்.
தனுசு:
வியாபாரத்தில் முன்னேற்றமும் தொழிலில் ஏற்பட்ட தடைகளும் விலகும். தாய் வழி உறவால் சில சிக்கல் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. நீண்ட நாட்களாக இருந்து வந்த உங்கள் ஆசை நிறைவேறும்.
மகரம்:
குடும்பத்துடன் உறவினர் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்பீர். திருமண வயதினருக்கு வரன் வரும். மனதில் இருந்த குழப்பம் நீங்கும். பணியிடத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும்.
கும்பம்:
பணியிடத்தில் நீங்கள் சங்கடப்படும் வகையில் உடன் இருப்பவர்கள் செயல்படுவார்கள். மனதில் இனம் புரியாத குழப்பம் ஏற்படும். உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும்.
மீனம்:
இன்று வண்டி வாகனத்தில் கவனமாக செல்ல வேண்டும். சிலருக்கு வெளியூர் பயணம் ஆதாயம் கொடுக்கும். கணவன் மனைவி இடையே உண்டான பிரச்சனைகள் விலகும். மகிழ்ச்சியான நாள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |