இன்றைய ராசி பலன் (15-09-2026)

Report

மேஷம்:

இன்று வேலை பளு அதிகரிக்கும். உங்கள் வீடுகளில் சில சொந்தங்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். ஒரு சிலருக்கு பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.

ரிஷபம்:

திடீர் மருத்துவ செலவுகளை சந்திக்கலாம். வேலையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். நண்பர்கள் உங்களுக்கு முழு ஆதரவையும் கொடுப்பார்கள். திருமண வாழ்க்கையில் உள்ள கசப்புகள் விலகும்.

மிதுனம்:

விளையாட்டு விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குடும்பத்தில் சில குழப்பங்கள் வரலாம். திருமணம் தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

கடகம்:

தொழில் ரீதியாக கவனமாக செயல்படுவது அவசியம். பிள்ளைகளுடைய ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.

2026: விநாயகர் சதுர்த்தி வழிபாடு செய்யக்கூடிய சரியான முறை என்ன?

2026: விநாயகர் சதுர்த்தி வழிபாடு செய்யக்கூடிய சரியான முறை என்ன?

சிம்மம்:

இன்று உங்களுடைய தாயார் உடல்நலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வாழ்க்கை துணையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் விலகும். வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் சாதகமாக அமையும்.

கன்னி:

குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகளை தவிர்ப்பதற்கு அமைதியாக பேசுவது அவசியம். வேலைக்காக திடீர் வெளியூர் பயணம் செல்ல நேரலாம். பணம் விஷயங்களில் கவனம் வேண்டும்.

துலாம்:

வழக்கு விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பிடித்த உணவுகளை சாப்பிட்டு மகிழ்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும். கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.

விருச்சிகம்:

தொழில் ரீதியாக மூன்றாம் நபர்களால் சில குழப்பங்கள் வர வாய்ப்புகள் உள்ளது. கலை துறையில் இருப்பவர்களுக்கு பொன்னான வாய்ப்புகள் தேடி வரும். கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.

தனுசு:

நீண்ட நாள் பிரச்சனை நல்ல முடிவைப்பெறும். குடும்பத்தில் உங்களுக்கான மதிப்பு உயரும். பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பாராத நபரின் சந்திப்பால் மகிழ்ச்சி உண்டாகும்.

2026: செவ்வாய் பெயர்ச்சி.. செப்டம்பர் 18 முதல் இந்த 3 ராசிகள் கவனமாக இருக்க வேண்டுமாம்

2026: செவ்வாய் பெயர்ச்சி.. செப்டம்பர் 18 முதல் இந்த 3 ராசிகள் கவனமாக இருக்க வேண்டுமாம்

மகரம்:

வழக்கு விஷயங்களில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும். குடும்பத்தினர் உங்களுடைய பேச்சுக்கு மதிப்பு கொடுப்பார்கள். அரசியல் விஷயங்களில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும்.

கும்பம்:

தந்தையால் ஏற்பட்ட மன கசப்புகள் விலகும். ஒரு சிலருக்கு திடீர் மருத்துவ செலவுகள் சந்திக்கலாம். முடிந்தவரை உங்களுடைய ரகசியங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.

மீனம்:

எதிர்பாராத நபரின் உதவியால் உங்களுக்கு ஒரு சில முன்னேற்றம் கிடைக்கலாம். நினைத்த வேலையை நினைத்த நேரத்தில் முடிப்பீர்கள். கடன் தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US