இன்றைய ராசி பலன்(11.12.2024)
மேஷம்
உங்களுடைய எண்ணம் செயலாகும்.நீங்கள் நீண்ட நாள் எதிர்பார்த்த வருமானம் வந்து சேரும்.பொருளாதாரத்தில் உயர்வும் மாற்றமும் உண்டாகும்.உடல் நிலை சீராகும்.
ரிஷபம்
வெளியூர் பயணத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.பிறருக்கு கடன் கொடுப்பதையும் வாங்குவதையும் தவிர்க்கவும்.வீண் வாக்கு வாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்.
மிதுனம்
இன்று நினைத்த படி உங்கள் செயல்கள் நிறைவேறும்.நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.பழைய பிரச்சனை முடிவிற்கு வரும்.
கடகம்
வியாபாரம் முன்னேற்றமடையும். குடும்பத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.திட்டமிட்ட வேலை நடக்கும்.புதிய முயற்சிகளில் நிதானம் தேவை.
சிம்மம்
உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.தடைபட்ட வேலை எளிதாக முடியும்.வியாபாரத்தில் அனுசரித்து செல்வது நல்லது.உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.
கன்னி
திடீரென்று நெருக்கடிக்கு ஆளாவீர்கள். மனக்குழப்பம் உண்டாகும். வாகனப் பயணத்தில் இன்று நிதானம் அவசியம்.தொழிலில் உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். வேலையில் தடையும் தாமதமும் ஏற்படும்.
துலாம்
குடும்பத்தில் உண்டான நெருக்கடிகள் விலகும்.நண்பர்கள் உதவியால் திறமையாக சில செயல்களை செய்து முடிப்பீர்கள்.வாழ்க்கை துணையின் ஆலோசனை உங்களுக்கு உதவியாக இருக்கும்.
விருச்சிகம்
நேற்றைய விருப்பம் நிறைவேறும். ஆரோக்கியம் சீராகும். நினைப்பது நிறைவேறும். செல்வாக்கு உயரும்.இழுபறியாக இருந்த பிரச்னையில் முடிவு காண்பீர். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.
தனுசு
குடும்பத்தில் சந்தோசம் நிலவும்.பிள்ளைகள் உங்களை புரிந்து நடந்து கொள்வார்கள்.மனதில் உண்டான காயங்கள் அகலும்.பேச்சில் கவனமாக இருக்க வேண்டும்.
மகரம்
வியாபாரம் விருத்தியாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். எதிர்பார்த்த தகவல் வரும்.மற்றவர் வார்த்தைகளைக் கேட்டு மனதை அலைபாய விடாதீர்கள். அதனால் சங்கடம் தோன்றும்.
கும்பம்
உங்கள் முயற்சியால் முன்னேற்றம் காண்பீர்கள்.உங்கள் செல்வாக்கு உயரும்.சூழ்நிலை அறிந்து செயல்படுவீர்கள்.தாய் தந்தை உறவில் சண்டைகள் வர வாய்ப்புள்ளது.கவனம் அவசியம்.
மீனம்
உழைப்பால் உயர்வு காணும் நாள்.மன தெளிவுடன் செயல்பட்டு சாதனை அடைவீர்கள்.அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும்.பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள்.இறைவழிபாடு நன்மை தரும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |