நாளைய ராசி பலன் (17-05-2026)

Report

மேஷம்:

நண்பர்களுடன் மகிழ்ச்சியான நேரம் செலவிடுவீர்கள். தொழில் ரீதியாக சந்தித்த பிரச்சனைகளில் இருந்து விடுபட சில வழிகள் பிறக்கும். உடல் சோர்வு நீங்கி புத்துணர்ச்சியாக செயல்படுவீர்கள்.

ரிஷபம்:

உங்கள் வீட்டில் சிறு சிறு குழப்பங்கள் தோன்றி மறையும். பொழுது போக்கு விஷயங்களில் நீங்கள் கலந்து கொள்வீர்கள். மாணவர்கள் படிப்பில் முழுமையான கவனம் செலுத்த வேண்டிய நாள்.

மிதுனம்:

இன்று தந்தை உடல் நிலையில் சற்று கவனமாக இருக்க வேண்டும். தேவையில்லாத வாக்கு வாதங்களை தவிர்க் வேண்டும். எதிர்காலம் பற்றிய பயமும் பதட்டமும் ஏற்படும். வேலையில் அதிக ஈடுபாடு செலுத்துவீர்கள்.

கடகம்:

இன்று உங்களுடைய தொழிலை விரிவு படுத்துவதற்கான யோசனை நிறைவேறும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். குழந்தைகள் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டும்.

சிம்மம்:

அரசாங்க தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த குழப்பங்கள் தடைகள் விலகும். வீட்டிற்கு விருந்தினர் வருகை தருவார்கள். சகோதரி வழி உறவுகளால் சில சிக்கல் உண்டாகும்.

2026 சனி ஜெயந்தி: 300 ஆண்டுக்கு பிறகு நடக்க இருக்கும் அதிசயம்.. ராஜவாழ்க்கை யாருக்கு?

2026 சனி ஜெயந்தி: 300 ஆண்டுக்கு பிறகு நடக்க இருக்கும் அதிசயம்.. ராஜவாழ்க்கை யாருக்கு?

கன்னி:

குடும்பத்தில் உள்ள தேவையில்லாத பிரச்சினைகள் உருவாகும். போட்டி பொறாமைகளை விட்டு விடுவது நல்லது. ஒன்றுக்கும் மேற்பட்ட வேலைப்பளுவை எடுத்து செய்வதால் உடல் சோர்வு உண்டாகலாம்.

துலாம்:

இன்று எதிர்கால வாழ்க்கையை பற்றிய பயமும் பதட்டமும் கொள்வீர்கள். ஒரு சிலருக்கு தியானத்தின் மீது அதிக ஈடுபாடு உண்டாகும். வாழ்க்கை துணையை பற்றி புரிந்து கொள்வீர்கள்.

விருச்சிகம்:

இன்று தேவை இல்லாமல் யாருக்கும் கடன் கொடுப்பதை தவிர்த்து விடுங்கள் உங்களை மீறி ஒரு சில சிக்கல்களில் சிக்குவதற்கான வாய்ப்பு உண்டு. கவனம் வேண்டும்.

தனுசு:

இன்று குடும்பத்தில் யாரை எப்படி அனுசரித்து செல்ல வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்வீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு முழு ஆதரவையும் கொடுப்பார்கள்.

கர்ம வினை நம்மை விட்டு எப்பொழுது முழுமையாக அகலும் தெரியுமா ?

கர்ம வினை நம்மை விட்டு எப்பொழுது முழுமையாக அகலும் தெரியுமா ?

மகரம்:

இன்று குடும்பத்தை மீறி சில முக்கிய முடிவுகளை எடுக்க நேரலாம். வாழ்க்கைத் துணையிடம் தேவையில்லாத விஷயங்களை பகிர்ந்து கொள்ளாதீர்கள். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.

கும்பம்:

இன்று அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் நீங்கள் நட்பாக பழகுவீர்கள். ஒரு சிலருக்கு ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு உண்டாகும். பிள்ளைகளின் கல்வி தேவைக்கான விஷயங்களை பூர்த்தி செய்வீர்கள்.

மீனம்:

இன்று உங்களுடைய கோபத்தை விட்டு விடுவது நல்லது. யார் எப்படியோ அவ்வாறே அவர்களை ஏற்றுக் கொள்ள பழகுவீர்கள். வாங்கிய கடனை அடைக்க முக்கியமான வழிகள் பிறக்கும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US