இன்றைய ராசி பலன்(30-04-2025)
மேஷம்:
இன்று உங்கள் குடும்பத்தில் சந்தோசம் அதிகரிக்கும். நண்பர்களுடன் தேவை இல்லாத வாக்கு வாதத்தில் ஈடுபடவேண்டாம். நீண்ட நாட்களாக முடிவிற்கு வராத செயல் ஒன்று நல்ல முடிவை பெரும்.
ரிஷபம்:
இன்று சிந்தித்து செயல்படுவதால் வரும் ஆபத்துகளில் இருந்து விலகலாம். நண்பர்ககுடன் பொன்னான நேரத்தை செலவு செய்வீர்கள். தாய் மாமன் ஆதரவு கிடைக்கும்.
மிதுனம்:
இன்று தேவை இல்லாத செயல்களை செய்வதை முற்றுலுமாக தவிர்க்க வேண்டும். பழைய பிரச்சனைகள் மீண்டும் தலை எடுக்கும். வேலை செய்யும் இடத்தில் சில சிக்கல்கள் உருவாக வாய்ப்புகள் உள்ளது.
கடகம்:
திட்டமிட்டபடி வேலைகளை செய்வதில் சங்கடம் உண்டாகும். வருமானத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் ஆதாயத்தை கொடுக்கும். மதியம் மேல் எதிர்பார்த்த செய்தி வரும்.
சிம்மம்:
வியாபாரம் செய்யும் இடத்தில் செல்வாக்கு உயரும். நேற்றைய முயற்சி நிறைவேறும். வருமானம் திருப்தி தரும். வியாபாரத்தை விரிவு செய்ய திட்டம் தீட்டுவீர். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.
கன்னி:
இன்று உங்கள் உழைப்பு உயரும் நாள். தந்தை வழி உறவால் ஆதாயம் பெறுவீர்கள். மனதில் தெளிவு உண்டாகும். பெரியவர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். குலதெய்வ வழிபாடு நன்மை தரும்.
துலாம்:
நீங்கள் விலகி சென்றாலும் பிரச்சனைகள் உங்களை தேடி வரும். வெளியூர் பயணம் ஆதாயமாக அமையும். சந்திராஷ்டமம் தொடர்வதால் யாரிடமும் வாக்கு வாதம் செய்ய வேண்டாம்.
விருச்சிகம்:
நீங்கள் நினைத்ததை நடத்தி முடிப்பீர். குடும்ப நெருக்கடி நீங்கும். விருப்பம் பூர்த்தியாகும். உங்கள் முயற்சியில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். வரவேண்டிய பணம் வரும்.
தனுசு:
நீங்கள் எண்ணிய காரியம் நிறைவேறும். உங்களுக்கு தொல்லை கொடுத்தவர்கள் விலகி செல்வார்கள். விவேகத்துடன் செயல்பட்டு நினைத்ததை சாதித்து முடிப்பீர்கள்.
மகரம்:
உங்கள் வேலைகளில் சிறு தடை ஏற்பட்டாலும் போராடி வெற்றி பெறுவீர்கள். புதிய முயற்சிகளை இன்று தள்ளி வைப்பது நல்லது. வரவு செலவில் இருந்த சங்கடம் விலகும்.
கும்பம்:
தடைகளைத் தாண்டி உங்கள் வேலைகளை நடத்தி லாபம் காண்பீர். உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்கள் வேலைகள் இன்று எளிதாக நிறைவேறும்.
மீனம்:
குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் ஒரு நல்ல முடிவை பெரும். அலுவலகத்தில் சந்தித்த பிரச்சனைகளுக்கு நல்ல முடிவு கிடைக்கும். பிள்ளைகள் வழியாக நல்ல ஆதாயம் பெறுவீர்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |