இன்றைய ராசி பலன்(29-07-2025)

Report

மேஷம்:

இன்று பொழுதுப்போக்கு விஷயங்களில் கவனம் செலுத்துவீர்கள். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். மதியம் மேல் மனதில் உண்டான குழப்பங்கள் விலகி பதில் கிடைக்கும்.

ரிஷபம்:

ஒரு சிலருக்கு வெளியூர் பயணம் மன கசப்பைக் கொடுக்கலாம். இறைவழிபாடு நன்மை அளிக்கும். வீட்டில் உள்ள பெரியவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். நன்மையான நாள்.

மிதுனம்:

குடும்ப உறுப்பினர் உங்களுக்கு எதிராக செயல் பட வாய்ப்புகள் உள்ளது. வேலையில் ஒரு சில சிக்கல்களை சந்திப்பீர்கள். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள்.

கடகம்:

திட்டமிட்டு செயல்படுவீர் வியாபாரத்தில் இருந்த தடை நீங்கும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும். மனக்குழப்பம் விலகும். மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும்.

சிம்மம்:

இன்று வியாபாரத்தில் சந்தித்த சிக்கல்கள் விலகி ஏற்றத்தை சந்திப்பீர்கள். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் விலகும். உறவினர்கள் உங்களுக்கு எதிராக செயல்பட வாய்ப்புகள் உள்ளது.

கன்னி:

இன்று மிகவும் போராட்டமான நாள். வேலை பளு அதிகரிக்கும். ஒரு சிலருக்கு குடும்பத்தில் எதிர்பாராத பெரிய பிரச்சனையை சந்திப்பீர்கள். அனுசரித்து செல்ல வேண்டிய நாள்.

துலாம்:

இன்று மனதில் தெளிவு பிறக்கும். ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு செலுத்துவீர்கள். உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சொத்து பிரச்சனைகள் விலகி செல்லும்.

இந்த ஒரு விஷயத்தை தொடர்ந்து செய்து வந்தால் தீய சக்திகள் உங்களை நெருங்காது

இந்த ஒரு விஷயத்தை தொடர்ந்து செய்து வந்தால் தீய சக்திகள் உங்களை நெருங்காது

 

விருச்சிகம்:

உங்கள் முயற்சி நிறைவேறி லாபத்தை உண்டாக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நினைத்ததை சாதிப்பீர். வேலையில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.

தனுசு:

குடும்பத்தில் உங்களுக்கு நற்பெயர் கிடைக்கும். முடிந்த வரை உணவு பழக்க வழக்கங்களில் கவனமாக இருக்க வேண்டும். மதியம் மேல் எதிர்பார்த்த செய்தி உங்களை வந்து சேரும்.

மகரம்:

தடைபட்ட வேலை நடக்கும். வரவேண்டிய பணம் வரும். புதிய முயற்சி வேண்டாம். வேலையில்  மட்டும் கவனம் செலுத்தவும்.  திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். 

கும்பம்:

மனக்குழப்பம் அதிகரிக்கும். செயல்களில் தடுமாற்றம் ஏற்படும். புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நல்லது. பணிபுரியும் இடத்தில் நெருக்கடி அதிகரிக்கும். ஒருசிலர் புதிய பிரச்னையை சந்திக்க நேரும்.

மீனம்:

இன்று நண்பர்கள் உங்களுக்கு முழு ஆதரவையும் கொடுப்பார்கள். வாழ்க்கை துணையுடன் ஏற்பட்ட விரிசல் விலகும். உங்கள் வருமானத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் விலகி முன்னேற்றம் பெறுவீர்கள்.   

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.

 

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US