இன்றைய ராசி பலன்(15-07-2025)
மேஷம்:
இன்று வேலை காரணமாக வெளியூர் செல்ல நேரலாம். வியாபாரத்தில் சந்தித்த பிரச்சனை விலகி செல்லும். உடல் ஆரோக்கியத்தில் சில சங்கடங்கள் தோன்றி மறையும்.
ரிஷபம்:
குடும்பத்தில் உங்களை புரிந்து நடந்துக் கொள்வார்கள். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோசம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக மனதில் நினைத்த காரியம் நல்ல முடிவைப் பெரும்.
மிதுனம்:
காதல் வாழ்க்கையில் சந்தித்த சங்கடங்கள் விலகும். குடும்பம் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். நண்பர்களிடம் சற்று கவனமாக இருக்க வேண்டும். நன்மையான நாள்.
கடகம்:
முகம் தெரியாதவர்களிடம் வீண் வாக்குவாதம் செய்வதை தவிர்க்க வேண்டும். வியாபாரத்தில் நினைத்த லாபம் பெறுவீர்கள். பிள்ளைகள் நலனில் முழு அக்கறை செலுத்துவீர்கள்.
சிம்மம்:
வீட்டிற்கு உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். தொழில் ரீதியாக சந்தித்த மறைமுக எதிரிகள் விலகி செல்வார்கள். வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். பேச்சுக்களில் கவனம் தேவை.
கன்னி:
இன்று முடிந்த வரை உங்கள் கருத்துக்களை அமைதியாக சொல்வது அவசியம். உணர்ச்சிவசப்படக்கூடிய நாள். தந்தை உடல் நிலையில் மிகுந்த கவனம் தேவை. மதியம் மேல் நற்செய்தி வந்து சேரும்.
துலாம்:
இன்று மனதில் தெளிவான சிந்தனையும் மகிழ்ச்சியும் உண்டாகும். குடும்பத்தில் உங்களுக்கான மதிப்பு உயரும். உடல் நிலையில் ஏற்ப்பட்ட சங்கடங்கள் விலகும். சந்தோஷமான நாள்.
விருச்சிகம்:
பேச்சில் கட்டுப்பாடு வைப்பதன் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். உங்கள் இனிமையான வார்த்தைகளால் மக்களின் இதயங்களை வெல்ல முயற்சிப்பீர்கள்.
தனுசு:
இன்று உறவினர்கள் பற்றிய சில உண்மைகளை புரிந்துக் கொள்வீர்கள். பிரிந்த சொந்தங்கள் உங்களை தேடி வருவார்கள். சமுதாயத்தில் உங்கள் மதிப்பு உயரும். இறைவழிபாடு நன்மை செய்யும்.
மகரம்:
தொழிலில் உங்கள் கடின உழைப்பை போடுவீர்கள். உங்கள் உழைப்பிற்கு ஏற்ற பாராட்டுக்கள் கிடைக்கும். இருப்பினும், உங்கள் கோபத்தை குறைத்துக் கொண்டு செயல்படுவது நன்மை தரும்.
கும்பம்:
நண்பர்களிடமிருந்து நன்மைகள் பெறலாம். அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். சமூகத்தில் உங்கள் புகழ் அதிகரிக்கும். குழந்தைகளுடனான உறவு நன்றாக இருக்கும்.
மீனம்:
குடும்ப சூழ்நிலையில் நல்ல மாற்றம் காண்பீர்கள். மனதில் சந்தோசம் உண்டாகும். பெற்றோர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். இன்று நினைத்த காரியம் நினைத்தபடி வெற்றி பெரும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |