இன்றைய ராசி பலன்(10-05-2025)

Report

மேஷம்:

இன்று நீண்ட நாட்களாக சந்தித்த பிரச்சனை ஒன்று நல்ல முடிவை பெரும். குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். மனதில் சில கவலை உருவாகும். எதையும் தீர ஆலோசித்து செய்ய வேண்டும்.

ரிஷபம்:

நீங்கள் குடும்ப நலனில் அக்கறை செலுத்துவீர்கள். பணிபுரியும் இடத்தில் உங்களுக்கான மதிப்பு உயரும். உறவினர்களால் நன்மை உண்டாகும். சில உண்மைகளை தெரிந்து கொள்ளும் நாள்.

மிதுனம்:

இன்று உங்கள் முயற்சிக்கு ஏற்ப ஆதாயம் கிடைக்கும். உங்கள் தேவைகளை நீங்களே பூர்த்தி செய்துக்கொள்ளும் நாள். வெளியூர் பயணம் உங்களுக்கு மன சங்கடத்தை கொடுக்கும்.

கடகம்:

நினைப்பது நிறைவேறும். மக்கள் சேவையில் ஈடுபடுவீர். மற்றவர் பாராட்டிற்கு ஆளாவீர். பிறரால் முடிக்க முடியாத வேலைகளை முடித்து ஆதாயம் காண்பீர். நெருக்கடி நீங்கும்.

சிம்மம்: 

வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் உங்களை தேடி வருவார்கள். தொழில் ரீதியாக சந்தித்த நஷ்டம் உங்களை விட்டு விலகும். இன்று உங்கள் முன்னேற்றத்திற்கான நாள்.

கன்னி:

மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். மனதில் நீண்ட நாட்களாக இருந்த கவலை விலகும். நிதானமாக செயல்படுவதால் நன்மை உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் வீண் வாக்குவாதம் தவிர்க்க வேண்டும்.

துலாம்:

இன்று மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள். நினைத்ததை நிறைவேற்றும் நாள். திடீர் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். எதையும் போராடி சமாளிப்பீர்கள்.

நரகத்தை விரும்பி ஏற்றுக் கொண்ட ஸ்ரீ ராமானுஜர்

நரகத்தை விரும்பி ஏற்றுக் கொண்ட ஸ்ரீ ராமானுஜர்

விருச்சிகம்:

இழுபறியாக இருந்த பிரச்சனை முடிவிற்கு வரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வழக்கமான செயல்களில் ஆதாயம் காண்பீர். தொழிலில் இருந்த தடைகள் விலகும். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வந்து சேரும்.

தனுசு:

பிள்ளைகள் எதிர்காலம் பற்றிய கவலை வளரும். உங்கள் தனிப்பட்ட தகவலை பிறரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். குடும்பத்தில் சில சிக்கலும் சண்டையும் உருவாக வாய்ப்புள்ளது. கவனம் அவசியம்.

மகரம்:

விஐபிகள் ஆதரவால் உங்கள் விருப்பம் நிறைவேறும். தந்தைவழி உறவுகளால் ஆதாயம் காண்பீர். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மனதில் இருந்த பயம் விலகும். நினைப்பதை சாதிக்கும் நாள். 

கும்பம்:

வெளியூர் பயணத்தில் தடைகள் தோன்றும். புதிய முயற்சிகள் இன்று வேண்டாம். வீண் பிரச்னைகள் தேடிவரும். இன்று யாருக்கும் முன்ஜாமீன் கொடுக்க வேண்டாம். மனதில் குழப்பம் அதிகரிக்கும்.

மீனம்:

இன்று ஒரு சில முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை நல்ல முடிவை பெரும். நண்பர்கள் உதவியால் சில ஆதாயம் கிடைக்கும். கோயில் வழிபாடுகளில் பங்கு கொள்வீர்கள்.

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US