நாளைய ராசி பலன் (16-05-2026)
மேஷம்:
உங்கள் வீடுகளில் தேவை இல்லாத சண்டை வர வாய்ப்புகள் உள்ளது, ஆதலால் கடந்த விஷயங்கள் பேசுவதை பற்றி தவிர்ப்பது குறைத்துக்கொள்ளுங்கள். வேலையில் ஆர்வம் அதிகமாகும்.
ரிஷபம்:
உங்கள் சேமிப்புகளில் கவனமாக இருக்க வேண்டும். ஆடம்பர செலவுகள் தவிர்க்க வேண்டும். நண்பர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். திடீர் வெளியூர் பயணம் செல்ல நேரலாம்.
மிதுனம்:
வாழ்க்கை துணையின் உடல் நிலையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் உள்ளவர்களை பற்றி புரிந்து கொள்வீர்கள். வீண் செலவு அலைச்சல் உண்டாகலாம்.
கடகம்:
உடன் பிறந்தவர்களால் நல்ல ஆதரவு கிடைக்கும். வேலை பளு அதிகரிக்கும். திருமணம் தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த கசப்புகள் விலகும். நன்மையான நாள்.
சிம்மம்:
யாரிடமும் தேவை இல்லாத வாக்கு வாதம் வைத்துக் கொள்ளாதீர்கள். பணப்பிரச்சனை விலகும். புதிய தொழில் தொடங்குவதை பற்றி ஆலோசனை செய்வீர்கள்.
கன்னி:
குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும். சோம்பேறித்தனத்தை விடுத்து சுறுசுறுப்பாக வேலை செய்வது அவசியம். புதிய முயற்சிகளில் கவனமாக இருக்க வேண்டும்.
துலாம்:
மனதில் இறைநம்பிக்கை அதிகரிக்கும். உங்களை வேண்டாம் என்று விலகி சென்றவர்கள் மீண்டும் உங்களிடம் வந்து பேசுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. மனச்சுமை விலகும்.
விருச்சிகம்:
தேவை இல்லாத போட்டி பொறாமைகளை விட்டு விடுங்கள். எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செயல்படுங்கள். வாழ்க்கை துணையிடம் தேவை இல்லாத வாக்கு வாதம் செய்யாதீர்கள்.
தனுசு:
குடும்பத்தில் முக்கியமான முடிவுகள் எடுக்கும் நிலை வரலாம். அரசியலில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். புதிய பொருட்கள் சேர்க்கை உண்டாகும். நம்பிக்கை பிறக்கும் நாள்.
மகரம்:
வெளிநாட்டு தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த தடைகள் விலகும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்து வந்த தடைகள் விலகும். பொருளாதார முன்னேற்றம் உன்டு.
கும்பம்:
இன்று காலை முதல் மனம் சற்று பதட்டமாக காணப்படும். வேலை பளு அதிகரிக்கும். பிரிந்த சொந்தங்கள் மீண்டும் ஒன்று சேர்வீர்கள். பிள்ளைகள் எதிர்காலத்திற்கு தேவையானதை செய்வீர்கள்.
மீனம்:
பிள்ளைகள் விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். எதிர்பார்த்து காத்திருந்த விஷயங்கள் நினைத்தபடி நடக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும் நாள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |