இன்றைய ராசி பலன்(22.04.2025)

Report

மேஷம்:

இன்று நீங்கள் எதிர்பாராத செய்தி உங்களை வந்து சேரும். உங்கள் திறமையை வளர்த்து கொள்வீர்கள். உங்கள் நட்பு வட்டாரம் விரிவடையும். வியாபாரத்தை விரிவு செய்வதை பற்றி யோசிப்பீர்கள்.

ரிஷபம்:

உங்கள் வருமானத்தில் சந்தித்து வந்த சிக்கல் விலகும். மனதிற்கு பிடித்த இடத்திற்கு சென்று மகிழ்வீர்கள். மனதில் நேர்மறை சிந்தனை பெருகும். ஒரு சிலருக்கு வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம்.

மிதுனம்:

வீட்டில் சில குழப்பங்கள் தோன்றி மறையும். மூன்றாம் நபரால் சந்தித்த தொல்லைகள் விலகும். குடும்பத்தில் உங்களுக்கான மரியாதை உயரும். விலகி சென்ற சொந்தங்கள் உங்களை தேடி வருவார்கள்.

கடகம்:

மனதில் எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். நினைத்த வேலையை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். நண்பர்கள் மத்தியில் உங்களுக்கு நற்பெயர் கிடைக்கும். குழப்பங்கள் விலகும்.

சிம்மம்:

பிறர் சூழ்நிலையை அறிந்து செயல்படுவீர்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட பிரச்சன்னைகள் வந்தாலும் தைரியமாக சமாளிப்பீர்கள். தொழில் செய்யும் இடத்தில் சில நெருக்கடிகளை சந்திப்பீர்கள்.

கன்னி:

உங்கள் பொருளாதார நிலை உயரும். நம்பிக்கையோடு செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். மனதில் ஏற்பட்ட பயம், குழப்பம் எல்லாம் முற்றிலுமாக விலகும். குடும்பத்தில் வீண் வாக்குவாதம் தவிர்ப்பது நன்மை தரும்.

துலாம்:

மனதில் தெளிவு பிறக்கும். எதிர்காலம் பற்றிய கவலை உண்டாகும். சிலருக்கு புதிய நட்புகளின் அறிமுகம் கிடைக்கும். இறைவழிபாட்டால் மனம் அமைதி அடையும். வேலை செய்யும் இடத்தில் கவனம் தேவை.

ஊர் மக்களின் சந்தேகம் தீர நடக்கும் சடங்கு

ஊர் மக்களின் சந்தேகம் தீர நடக்கும் சடங்கு

விருச்சிகம்:

செயல்களில் இருந்த தடை நீங்கும். எதிர்பார்த்த தகவல் வரும். வியாபார போட்டியாளர் விலகுவர். உழைப்பிற்கேற்ற வருமானம் வரும். உங்கள் திறமை மதிக்கப்படும். மற்றவரால் முடிக்க முடியாத வேலையை செய்து முடிப்பீர்.

தனுசு: 

பிள்ளைகள் பற்றிய கவலை மேலோங்கும். தாய் வழி உறவால் நல்ல ஆதரவு கிடைக்கும். ஒரு சிலருக்கு வெளியூர் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்புகள் வரலாம். மதியம் மேல் நீங்கள் எதிர்பார்த்த காரியம் வெற்றி அடையும்.

மகரம்:

நேற்றைய பிரச்னை முடிவிற்கு வரும். செல்வாக்கு உயரும். திட்டமிட்டு செயல்பட்டு முயற்சியில் லாபம் காண்பீர். பணிபுரியும் இடத்தில் கவனம் அவசியம். வியாபாரத்தில் சில பிரச்னை தோன்றும். அலைச்சல் உண்டாகும்.

கும்பம்:

வரவை விட செலவு அதிகரிக்கும். குடும்பத்தில் சிறு குழப்பம் தோன்றும். புதிய முயற்சி எதுவும் வேண்டாம். உதவி புரிவதாக சொன்னவர் விலகிச்செல்வர். உங்கள் வார்த்தைகளால் சில பிரச்னைகளை சந்திப்பீர்.

மீனம்:

உங்களை பற்றிய பயம் உண்டாகும். வீட்டில் சூழ்நிலை அறிந்து செயல்படுவீர்கள். தொழிலில் உண்டான சிக்கல் விலகும். பெரியவர்கள் ஆதரவால் நன்மை உண்டாகும். இறைவழிபாடு நன்மை தரும்.    

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US