இரட்டை ராஜ யோகத்தால் அதிர்ஷ்ட பணமழை பெரும் 3 ராசிகள்
ஜோதிடத்தில் சூரியன் தலைமையான கிரகம் ஆகும். இவர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல சுமார் ஒரு மாதம் எடுத்து கொள்வார். அப்படியாக, சூரியனின் நிலை மாறும் பொழுதெல்லாம் அந்த தாக்கம் எல்லா ராசியினருக்கு இருக்கும்.
தற்பொழுது மீன ராசியில் புதனும் சூரியனும் இணைந்து உள்ளார்கள். அதோடு சுக்கிரனும் மீன ராசியில் சஞ்சரிக்கிறார். இந்த சூரியன் சுக்கிரன் இணைவும் அதோடு, புதன் சூரியன் இணைவு பல அதிர்ஷ்டங்களை கொடுக்க போகிறது. அந்த அதிர்ஷ்டத்தை எந்த ராசியினர் அனுபவிக்க போகிறார்கள் என்று பார்ப்போம்.
துலாம்:
துலாம் ராசிக்கு இந்த இரட்டை யோகம் பொருளாதாரத்தில் நல்ல மாற்றத்தை கொடுக்கும். மனதில் உற்சாகம் பிறக்கும். சிலருக்கு சுற்றுலா பயணம் செல்ல வாய்ப்புகள் கிடைக்கும். படிப்பில் சிறந்து விளங்குவார்கள். வாழ்க்கை துணையுடன் நல்ல நேரத்தை செலவு செய்வார்கள்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்கு இந்த இரட்டை யோகம் அவர்களுக்கு தொழில் ரீதியாக நல்ல வளர்ச்சியை கொடுக்க போகிறது. மேல் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். சிலர் வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். புதிய நிலம் வாங்குவதை பற்றி ஆலோசனை செய்வீர்கள்.
தனுசு:
தனுசு ராசிக்கு இந்த இரட்டை ராஜ யோகம் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் உருவாகும். குடும்பத்தில் சந்தோஷமும் நிம்மதியும் உண்டாகும். சிலருக்கு வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நினைத்ததை சாதிக்கும் காலகட்டம் ஆகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |