இந்த கனவுகள் எல்லாம் வந்தால் சற்று கவனமாக இருக்க வேண்டுமாம்
கனவு என்பது நம்முடைய ஆழ் மனதின் வெளிபாடு என்றாலும் சமயங்களில் நம்முடைய எதிர்காலத்தை பற்றி நமக்கு முன்னெச்சரிக்கையை கொடுக்கக்கூடிய ஒரு அறிகுறியாகவும் வருகிறது. அப்படியாக நமக்கு வரக்கூடிய கனவுகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் இருக்கிறது.
அந்த வகையில் ஒருவருடைய கனவில் பெண்களுடைய தாலியை பார்க்கிறார்கள் என்றால் என்ன அர்த்தம் என்பதை பற்றி பார்ப்போம்.
திருமணத்தில் திருமாங்கல்யம் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. ஒருவருடைய கனவில் திருமாங்கல்யத்தை அவர்கள் பார்க்கிறார்கள் என்றால் அது ஒரு மிகச்சிறந்த நல்ல அறிகுறியாக பார்க்கப்படுகிறது. அவர்களுடைய திருமண வாழ்க்கையில் அன்பும், கணவன் மனைவி இடையே ஒற்றுமையும், பொருளாதாரத்தில் செழிப்பும் அதிகரிக்க கூடிய ஒரு அறிகுறியாக சொல்லப்படுகிறது.

மேலும் கனவுகளில் புதிதாக ஒருவர் திருமாங்கல்யம் வாங்குவது போல் பார்த்தால் அவை அவர்களுடைய பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய முன்னேற்றத்தை குறிக்கக்கூடிய அறிகுறியாகும். மேலும் வீடுகளில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும் என்கிறார்கள்.
கனவுகளில் திருமாங்கல்யம் கீழே விழுவது போல் கண்டால் அது மிகவும் அசுபமாக பார்க்கப்படுகிறது. இதனால் குடும்பத்தில் கணவன் மனைவி இடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகளும் பிரச்சனைகளும் சந்திக்க நேரலாம் என்கிறார்கள்.
அதேபோல் திருமாங்கல்யம் அறுந்து போவதைப் போல் கனவு கண்டால் நாம் நிச்சயம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். திருமணமாகாத பெண் கனவில் திருமாங்கல்யம் பார்த்தால் அந்த பெண்ணுக்கு வெகு விரைவில் திருமணம் கைகூடும் என்பதின் அறிகுறியாகும்.

உங்களுக்கு ஒருவர் திருமாங்கல்யத்தை பரிசளிப்பது போல் கனவு கண்டால் அது கணவருடைய வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய வெற்றியை குறிப்பதின் அறிகுறியாகும். இவ்வாறு கனவுகள் வரும்பொழுது வீடுகளில் ஒரு மிகச்சிறந்த முன்னேற்றத்தை காணலாம்.
மேலும், நம்முடைய இந்து மத சாஸ்திரத்தில் மாங்கல்யம் லட்சுமி தேவியின் அம்சமாகவும், கணவரின் நீண்ட ஆயுளை குறிக்கக்கூடிய அடையாளமாகவும் இருக்கிறது. ஆக திருமாங்கல்யத்தை குறிப்பாக கனவுகள் பார்க்கும் பொழுது நன்மை தீமை பற்றி யோசிக்காமல் நிச்சயம் ஆலய வழிபாடு செய்வது நல்ல பலன் அளிக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |