கனவுகளில் தண்ணீரை கண்டால் நன்மையா? தீமையா?

By Sakthi Raj May 16, 2025 07:10 AM GMT
Report

 கனவு என்பது நாம் தவிர்க்க முடியாத ஒன்று. அதே போல் நமக்கு என்ன மாதிரியான கனவுகள் வரும் என்பதை நாம் கணிக்க முடியாது. அப்படியாக, நாம் எதிர்பாராத விஷயங்கள் எல்லாம் நாம் கனவில் பார்க்க முடியும்.

அவ்வாறு காணும் ஒவ்வொரு விஷயங்களுக்கு பின்னாலும், ஒவ்வொரு காரணம் இருப்பதாக ஜோதிடத்தில் சொல்கிறார்கள். அந்த வகையில் கனவில் தண்ணீர் வந்தால் என்ன பலன்கள் என்று பார்க்கலாம். 

கனவுகளில் தண்ணீரை கண்டால் நன்மையா? தீமையா? | Is It Good To See Water In Dreams

சிலருக்கு நீண்ட வருடமாக ஒரே விஷயம் கனவில் வருவதை நாம் கவனிக்க முடியும். அவ்வாறு வரும் கனவுகள் நம்முடைய வாழ்க்கையில் ஏதோ ஒரு முக்கிய விஷயத்தை கவனிக்க தவறியதை உணர்த்தும் அறிகுறிகள் ஆகும்.

அப்படியாக, திடீர் என்று கனவில் தண்ணீர் வருகின்றது என்றால் அதற்கு பின்னாலும், ஜோதிட ரீதியாக ஒரு முக்கிய காரணங்கள் சொல்லப்படுகிறது. அவ்வாறு கனவில் தண்ணீரை கண்டால், நம் வாழ்க்கையில் நிறைய நற்செய்திகளை கேட்க போவதாக சொல்லப்படுகிறது.

ஜோதிடம்: தெருநாய்களுக்கு தினமும் உணவு வழங்குபவர்களா? இதை பின்பற்றுங்கள்

ஜோதிடம்: தெருநாய்களுக்கு தினமும் உணவு வழங்குபவர்களா? இதை பின்பற்றுங்கள்

மேலும், அவை நாம் செய்யும் தொழிலில் லாபத்தை சந்திக்கக்கூடும் என்பதற்கான அறிகுறியாகவும் பார்க்கப்படுகிறது. தண்ணீர் என்றால் அதில் நதி, குளம், மழை, கிணறு போன்ற நீர்நிலைகள் எல்லாம் அடங்கும்.

அதன் அடிப்படையில் கனவுகளில் ஆறுகளை கண்டால் அவை மிக பெரிய நல்ல விஷயமாக கருதுகிறார்கள். இவ்வாறான கனவுகள் வரும் பொழுது நாம் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த சுப நிகழ்ச்சி ஒன்று நடக்க வாய்ப்புகள் உள்ளது.

கனவுகளில் தண்ணீரை கண்டால் நன்மையா? தீமையா? | Is It Good To See Water In Dreams

அதே போல் புனித நதிகள் நம்முடைய கனவில் வந்தால் நீண்ட நாட்களாக சந்தித்த பிரச்சனை ஒன்று நம்மை விட்டு விலகும். நம் வாழ்விலும் மிகப் பெரிய மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் சந்திக்க போகின்றோம் என்று அர்த்தம்.

அதுவே கனவில் மழை நீரை கண்டால் உங்களுக்கு செல்வமும் அதிர்ஷ்டமும் புகழும் வந்து சேரப்போவதாக சொல்லப்படுகிறது. கனவு சாஸ்திரத்தின்படி, ஒருவருக்கு கனவில் கிணறு அல்லது கிணற்றுத் தண்ணீர் வந்தால், குடும்பத்தில் ஏற்பட்ட மனக்கசப்புகள் எல்லாம் விலகுவதாக சொல்லப்படுகிறது.

அதோடு செய்யும் வேலையில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கிறது. மறுபக்கம் கனவுகளில் நாம் கெட்ட தண்ணீரை கண்டால் கவனமாக இருக்க வேண்டும். அவை நமக்கு ஒரு எச்சரிக்கை அறிகுறி என்றே எடுத்துக்கொள்ளலாம்.

அவ்வாறு கனவுகள் வரும் பொழுது பதட்டம் அடையாமல் இறைவழிபாட்டில் கவனம் செலுத்துவது நன்மை அளிக்கும்.     

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.

 

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US