முருகப்பெருமான் தமிழ் கடவுளா? இல்லையா? குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி இதோ
இந்து மத சாஸ்திரத்தின் அடிப்படையில் பரம்பொருள் என்பவர் ஒருவரே ஆனால் அவரே காலத்திற்கு தகுந்தார் போல் வெவ்வேறு இடங்களிலும் நேரத்திலும் அவதாரம் எடுத்து இருக்கிறார். ஆதலால், நாம் எப்பொழுதும் இறைவனை ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பிற்குள் அடக்குவது தவறானது என்று சொல்லப்படுகிறது.
மேலும், இந்து மத சாஸ்திரத்தின் அடிப்படையில் மதச் சடங்குகள் என்பது வெறும் நம்பிக்கைக்கானது மட்டுமல்ல அதற்குப் பின்னால் நமக்கு நிறைய தத்துவங்களையும் உணர்த்தக் கூடியதாக இருக்கிறது.
மேலும், கலியுக வரதனாக போற்றக்கூடிய முருகப்பெருமான் தமிழகத்தில் மட்டுமல்லாமல் ஒரிசா, மகாராஷ்டிரா காஷ்மீர், இந்தோனேசியா போன்ற பல்வேறு இடங்களிலும் இருந்ததற்கான கல்வெட்டு மற்றும் நாணயச் சான்றுகள் இருக்கிறது.
அதாவது படையெடுப்புகளால் பல கோவில்கள் சிதைக்கப்பட்டதால் பல ஆதாரங்கள் மறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதோடு பக்தர்கள் எப்பொழுதும் ஆன்மீகத்தை சினிமாவில் தேடுவதை நிறுத்த வேண்டும்.
முருகப்பெருமான் பிரபஞ்சத்தின் தெய்வம் என்பதால் அவரை வெறும் மனித பார்வையோடு பார்ப்பது மட்டுமல்லாமல் பக்தி மார்க்கத்தோடு உயர்ந்து புரிந்து கொள்ள வேண்டும் என்று சொல்கிறார் பிரபல முருக பக்தரும் ஆன்மீக பேச்சாளர் ஆன விஜயகுமார் அவர்கள்.
அவர் முருகப்பெருமான் தமிழ் கடவுளா இல்லையா என்பதை பற்றி பல்வேறு விஷயங்களை விளக்குகிறார். அதை பற்றி பார்ப்போம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |