2026: நாளை ஆடி முதல் வெள்ளியில் பெண்கள் செய்ய வேண்டிய 8 விஷயங்கள்
ஆடி மாதம் மிகச் சிறந்த மாதமாக இருக்கிறது. ஆடியில் வரக்கூடிய வெள்ளி செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமை மிகவும் உகந்த நாளாகும்.
அந்த வகையில், இந்த வருடம் ஆடிப்பிறப்பு வெள்ளிக்கிழமை அன்று வருவது இன்னும் கூடுதல் சிறப்பை பெறுகிறது. ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை அன்று பெண்கள் செய்ய வேண்டிய 8 விஷயங்களைப் பற்றி பார்ப்போம்.
1. ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை அன்று கட்டாயமாக பெண்கள் வீடுகளில் நெய் தீபம் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும்.
2. ஆடி மாதம் அம்மன் மற்றும் மகாலட்சுமி தேவிக்கு உகந்த மாதம் என்பதால் வெள்ளிக்கிழமை மகாலட்சுமி தாயாருக்கு தாமரை மலர் அல்லது செம்பருத்தி மலர் சமர்ப்பித்து வழிபாடு செய்வது அவசியம்.
3. பிறகு பூஜை அறையில் மகாலட்சுமியின் திரு உருவ படத்திற்கு முன்பாக அமர்ந்து "ஓம் ஸ்ரீ மகாலட்சுமி நம" என்ற மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்வது மகாலட்சுமியின் பரிபூரண அருளை பெற்றுக் கொடுக்கும்.

4. இந்த நாளில் முடிந்தவர்கள் கட்டாயமாக சர்க்கரை பொங்கல் அல்லது பாயாசத்தை நெய்வேத்தியமாக படைத்து வழிபாடு செய்யலாம்.
5. பெண்கள் இந்த நாளில் மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு ஆகிவற்றை பிற பெண்களுக்கு வழங்குவது மகாலட்சுமி தாயாரின் முழு ஆசிர்வாதத்தை பெற்றுக் கொடுக்கும்.
6. இந்த நாளில் கட்டாயமாக வீட்டில் முன்பாக அரிசி மாவில் கோலம் போடுவது மிக மிகவும் மங்களகரமானது.
7. அன்றைய தினம் கட்டாயமாக வீடுகளில் மகாலட்சுமி அஷ்டோத்திரம் அல்லது கனகதாரா ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்வது அதிர்ஷ்டத்தை பெற்றுக் கொடுக்கும்.
8. இந்த நாளில் நம்முடைய வசதிகளுக்கு ஏற்ப தான தர்மம் செய்வது புண்ணியத்தை சேர்த்து கொடுக்கும்.
ஆக, நாளைய தினமான முதல் ஆடி வெள்ளிக்கிழமையை இந்த விஷயங்களை செய்து இறைவனின் முழு ஆசீர்வாதத்தை பெற தவறாதீர்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |