இந்த 5 ராசியில் பிறந்தவர்கள் பணத்தை தண்ணீராக செலவழிப்பார்களாம்
ஜோதிடத்தில் 12 ராசிகளுக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் இருக்கிறது. அப்படியாக, எந்த ராசியினர் பணத்தை எப்படி செலவழிப்பார்கள்/ யார் அதிகமாக செலவழிப்பார்கள்? யார் பணத்தை சிக்கனமாக சேமித்து வைத்துக் கொள்வார்கள் என்பதை பற்றி பார்ப்போம்.
மேஷம்:
இவர்கள் பணத்தை எப்பொழுதும் யோசிக்காமல் செலவழிக்க கூடியவர்கள்.
ரிஷபம்:
இவர்கள் பணத்தை எப்பொழுதும் சிக்கனமாக கவனமாக பாதுகாக்க கூடியவர்கள்.
P5E26UP
மிதுனம்:
இவர்கள் தேவையானதை மட்டும் வாங்குவார்கள். அதற்கு மட்டுமே இவர்கள் பணம் செலவு செய்வார்கள்.
கடகம்:
இவர்கள் குடும்பத்திற்காகவே அதிக பணத்தை செலவழிக்க கூடியவர்கள்.
சிம்மம்:
இவர்கள் பணத்தை எப்பொழுதும் ராஜாவைப் போல் செலவழிக்க கூடியவர்கள்.
கன்னி:
இவர்கள் செலவழிக்க கூடிய பணத்திற்கு ஒவ்வொன்றுக்கும் கணக்கு கேட்பவர்கள்.

துலாம்:
இவர்கள் எப்பொழுதும் செலவிற்கும் சேமிப்பும் சரியாக செய்வார்கள்.
விருச்சிகம்:
இவர்கள் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக எப்பொழுதும் பணத்தை சேமித்துக் கொண்டே இருப்பார்கள்.
தனுசு:
இவர்களுக்கு எப்பொழுதும் சுதந்திரமாக இருப்பது பிடிக்கும். அதனால் தண்ணீர் போல் இவர்கள் பணத்தை செலவழிப்பார்கள்.
மகரம்:
இவர்கள் எப்பொழுதும் பணத்தை முதலீடு செய்வது எப்படி? அதை இரட்டிப்பாகுவது எப்படி என்பதை பற்றியே சிந்திப்பார்கள்.
கும்பம்:
இவர்கள் பணம் கைகளில் இருந்தால் புதிய பொருட்களை வாங்கி மகிழ ஆசைப்படுவார்கள்.
மீனம்:
இவர்கள் மற்றவர்களுக்கு உதவி செய்து இவர்களுடைய பணத்தை கரைத்து விடுவார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |