ஆபத்துகளில் இருந்து காக்கும் ஐயப்பனின் சக்தி வாய்ந்த மகா மந்திரம்
கார்த்திகை மாதம் என்றாலே எல்லா இடங்களிலும் ஐயப்ப பாடல்கள் ஒலிப்பதையும் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து வழிபாடு செய்வதை நாம் காணலாம். மேலும், ஐயப்பனுடைய அருள் இருந்தால் மட்டுமே சுவாமியே சரணம் ஐயப்பா என்று சொல்லி அவனை சரண் அடைந்து அவன் பொற்பாதங்களை காண்பதற்கு நமக்கு வாய்ப்பு கிடைக்கும்.
அப்படியாக ஐயப்பனை வழிபாடு செய்வது மிகவும் எளிமையானது. இந்த வழிபாட்டிற்கு தேவை ஒழுக்கம் மட்டும்தான். ஒருவர் ஒழுக்கத்துடனும் மன தூய்மையுடன் ஐயப்பனை சரண் அடைந்து வழிபாடு செய்யும் பொழுது அவர்கள் கேட்ட வரத்தை உடனே ஐயப்பன் அருள்கிறார்.
அதோடு ஐயப்பன் பக்தர்கள் இருக்கக்கூடிய அந்த 48 நாட்கள் விரதம் என்பது மிகவும் கடுமையான விரதம் ஆகும். இந்த விரதத்தில் சுத்தமும் ஒழுக்கமும் பற்றற்ற வாழ்க்கையையும் பக்தர்கள் கடைப்பிடிக்கிறார்கள். ஐயப்பனுடைய வழிபாடு என்பது பற்றற்ற தன்மையை குறிக்கிறது.

அதாவது எல்லாம் அவன் செயல் என்று அவன் பாதங்களை பிடித்துக் கொண்டு சரண் அடைவது தான் ஐயப்பன் வழிபாடாகும். ஐயப்பனுக்கு செல்வம், புகழ் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்று எல்லாம் கடந்து ஒழுக்கம் என்ற ஒரு நிலையில் மனிதன் தன்னை வைத்துக்கொண்டு அவனை மனதில் நிறுத்தி வழிபாடு செய்தால் மட்டுமே அவர்களால் ஐயப்பனை நெருங்க முடியும்.
மேலும் ஐயப்பன் என்றாலே நம்மை ஆபத்திலிருந்து காக்க கூடியவர். அந்த வகையில் உங்களுக்கு ஒரு மிகப்பெரிய ஆபத்து அல்லது தீராத துன்பத்தில் தவிக்கும் பொழுதுஉங்களை காப்பற்ற ஒரு கரங்கள் வேண்டும் என்றால் கட்டாயம் ஐயப்பனுடைய இந்த மகா மந்திரத்தை நீங்கள் பாராயணம் செய்து கொண்டால் நிச்சயம் அந்த இடத்தில் ஒரு அதிசயம் நடக்கும்.
மகா மந்திரம்:
"பூதநாத ஸதானந்தா
சர்வ பூத தயாபரா
ரக்ஷ ரக்ஷ மஹா பாஹோ
சாஸ்த்ரே துப்யம் நமோ நமஹ"

ஐயப்ப பகவானுடைய இந்த மகா மந்திரத்தை புதன்கிழமை தோறும் பாராயணம் செய்து வழிபாடு செய்து வந்தால் கட்டாயமாக வீடுகளில் நல்ல மாற்றம் கிடைக்கும். இதை புதன்கிழமைகளில் மட்டும் பாராயணம் செய்து வழிபாடு செய்ய வேண்டும் என்பது அல்ல.
ஒவ்வொரு நாளும் காலை மாலை வேளையில் பூஜை அறையில் அமர்ந்து மனதார இந்த மகா மந்திரத்தை பாராயணம் செய்து நாம் வழிபாடு செய்து வரும் பொழுது கட்டாயமாக ஐயப்பனின் அருளால் உங்களை எந்த ஒரு தீய சக்தியும் தீங்குகளும் நெருங்க இயலாது. அதோடு குடும்பத்தில் சகல ஐஸ்வர்யங்களும் வந்து சேரும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |