இன்றைய ராசி பலன் (30.01.2025)
மேஷம்:
இன்று பொருளாதாரத்தில் சில சிக்கல்கள் உருவாகலாம்.மூன்றாம் நபரின் தலையிட்டால் கருத்து வேறுபாடுகள் வர வாய்ப்புகள் உள்ளது.பிள்ளைகள் உடல் நலனில் அக்கறை செலுத்துவது நன்மை தரும்.
ரிஷபம்:
வியாபரத்தில் நல்ல லாபம் பெறுவீர்கள்.புதிய நட்புகள் அறிமுகம் கிடைக்கும்.சிலர் மேற்படிப்பு படிப்பதை பற்றி ஆலோசனை செய்வீர்கள்.போட்டி தேர்வுகளுக்கு தயார் ஆகும் மாணவர்கள் கவனமாக படிக்கவும்.'
மிதுனம்:
மன உளைச்சல் அதிகம் காணப்படும் நாள்.வீட்டில் உள்ளவர்களிடம் கருத்து வேறுபாடுகள் உருவாகும்.எண்ணிய காரியம் எளிதாக நிறைவேருக்கும்.எதிர்கால சிந்தனை அதிகம் தோன்றும்.
கடகம்:
நினைத்த வேலைகளை நினைத்தபடி முடிப்பீர். மனக்குழப்பம் நீங்கும். செல்வாக்கு உயரும்.நண்பர்கள் ஒத்துழைப்பால் உங்கள் வேலைகள் நடந்தேறும். வியாபாரத்தில் வாடிக்கையாளர் அதிகரிப்பர்.
சிம்மம்:
அலுவலகத்தில் வேலை பளு அதிகரிக்கும்.உறவினர்கள் வருகையால் வீட்டில் சந்தோஷம் நிலவும்.வெளியூர் செல்லும் வாய்ப்பு இருந்தாலும் தவிர்ப்பது நல்லது.ஒரு முறைக்கு பல முறை யோசித்து செயல்படவேண்டிய நாள்.
கன்னி:
வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். இழுபறியாக இருந்த சொத்து விவகாரம் முடிவிற்கு வரும்.நம்பிக்கையுடன் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். மனதில் ஏற்பட்ட பயம்போகும்.
துலாம்:
உடல் நிலையில் சிறு சங்கடம் உருவாகும்.மனதில் தெளிவும் தன்னம்பிக்கையும் வளரும்.பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள்.வேலையில் சில சிக்கல்கள் தோன்றும்.கவனமாக இருக்க வேண்டிய நாள்.
விருச்சிகம்:
செயல்களில் இருந்த தடை நீங்கும். வியாபார போட்டியாளர்கள் விலகுவர்.உழைப்பிற்கேற்ற வருமானம் வரும். மற்றவரால் முடிக்க முடியாத வேலையை செய்து முடிப்பீர்.முயற்சி வெற்றியாகும்.
தனுசு:
உங்கள் வேலையில் நீங்கள் முழுமையான கவனம் செலுத்துங்கள்.மனதில் எதிர்காலம் பற்றிய கவலை வளரும்.பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.உடல் சோர்வாக காணப்படுவீர்கள்.
மகரம்:
நேற்றைய பிரச்னைகள் முடிவிற்கு வரும். உங்கள் செல்வாக்கு உயரும்.வேலையில் கவனம் செலுத்துங்கள். வியாபாரத்தில் சில பிரச்னைகள் தோன்றும்.வியாபாரத்தில் ஏற்பட்ட போட்டிகள் விலகும்.
கும்பம்:
செலவு அதிகரிக்கும். குடும்பத்தில் சிறு குழப்பம் தோன்றும். புதிய முயற்சி இன்று வேண்டாம்.உதவி புரிவதாக சொன்னவர்கள் விலகிச்செல்வர்.உங்கள் பேச்சால் சில பிரச்னைகளை சந்திப்பீர்.
மீனம்:
வேலை செய்யும் இடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.தந்தை ஆலோசனை கேட்டு நடப்பீர்கள்.வீட்டில் சுபகாரிய பேச்சு நடக்கும்.இறைவழிபாடு நல்ல மாற்றம் கொடுக்கும்.நன்மையான நாள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |