கேட்டதை அள்ளிக்கொடுக்கும் தை பூசம் முருகப்பெருமான் விரதம்
கடவுள்களில் மிகவும் இளகிய இதயம் கொண்டவர் முருகப்பெருமான்.பக்தர்கள் கேட்கும் எதையும் அவர் உடனே வாரி வழங்கக்கூடிய அற்புதம் உள்ளம் படைத்தவர்.பலரும் முருகப்பெருமானை நினைத்து விரதம் இருந்து வழிபாடு செய்து வாழ்க்கையில் கிடைக்கவே கிடைக்காது என்று எண்ணிய பல விஷயங்களை அடைந்திருக்கிறார்கள்.
அது தான் முருகப்பெருமான் நிகழ்த்தும் அதிசயம்.அப்படியாக முருகப்பெருமானுக்கு உகந்த நாளாக தைப்பூசம் திகழ்கிறது.பலரும் தை பூசத்திற்கு முருகப்பெருமானுக்கு விரதம் இருந்து காவடி எடுத்து பாதை யாத்திரை செல்வார்கள்.
பலரும் தை பூச விழாவிற்காக 48 நாட்கள் முன்னதாகவே விரதம் இருந்து வழிபட தொடங்குவார்கள்.யார் ஒருவர் தைப்பூசம் விழாவிற்கு விரதம் இருந்து வழிபாடு செய்கிறார்களோ அவர்களுக்கு முருகன் அருளால் நினைத்த காரியங்கள் எல்லாம் நிறைவேறும்.
தீராத துன்பம் எல்லாம் விலகும்.பலரும்,தைப்பூசத்தன்று குழந்தைகளுக்கு, சோறு ஊட்டுதல், காதுகுத்துதல், மொட்டை அடித்தல் போன்ற நற்காரியங்களை செய்வார்கள்.மேலும்,தேவர்களில் குருவாகிய பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசம் என்பதால் தைப்பூசத்தன்று குரு வழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும்.
மேலும் திருமண தடை உள்ளவர்கள்,நீண்ட நாளாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த தை பூசம் அன்று விரதம் இருந்து வழிபாடு செய்தால் அவர்களுக்கு விரைவில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.
ஆக,வருகின்ற பிப்ரவரி 11 ஆம் தேதி முருகப்பெருமானை நினைத்து விரதம் இருந்து வழிபாடு செய்தால் அவர்கள் வாழ்க்கையில் வரும் தடைகள் விலகும்.எதிரிகள் முற்றிலுமாக ஓய்ந்துபோவார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |