புத்தரை விரும்பாத மனிதர்கள் இருக்கமாட்டார்கள்.புத்தர் அமைதியின் உருவமாக பார்க்கபப்படுகிறார்.அதாவது,பதட்டமான உலகில் ஒருவருடைய மன ஓட்டங்களை கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலையில் புத்தர் முன் அமர்ந்து தியானம் செய்யவது பலருக்கும் மன அமைதி கொடுக்கிறது.ஆதலால் புத்தர் சிலையை அவர்கள் வீட்டில் வைப்பதும்,புத்தர் ஓவியம் வரைவதையும் பலரும் விரும்புகிறாரக்ள்.
பலரும் புத்தர் சிலையை வீட்டில் அவர்களுக்கு பிடித்த இடங்களில் வைத்திருப்பதை பாத்திருப்போம்.ஆனால் பலருக்கும் ஒரு வித சந்தேகம் வந்து இருக்கும்.அதாவது புத்தர் சிலையை பூஜை அறையில் வைத்து வழிபடலாமா என்று.அதை பற்றி பார்ப்போம்.
பொதுவாக வீட்டில் புத்தர் சிலை வைப்பது ஒரு வித அமைதியை கொடுக்கும்.மேலும்,ஆதிசங்கரர், ராமானுஜர், ராகவேந்திரர், சாயிபாபா போன்று புத்தரும் மனிதராக வாழ்ந்து இறைநிலையை அடைந்தவர் என்பதால், புத்தர் சிலையை பூஜை அறையில் வைத்து வணங்கலாம் என்கிறார்கள் வாஸ்து நிபுணர்கள்.
அதே போல் வீட்டில் புத்தர் சிலையை வைப்பதால் நல்ல ஆற்றல் கொடுக்கும்.வீட்டில் ஒரு வித நேர்மறை ஆற்றல் பெருகும்.ஒருவர் வீட்டில் புத்தர் ஓவியம் வரைய வேண்டும் என்றால் வடக்கு மற்றும் வடகிழக்கு ஆகியவை புத்தர் ஓவியங்களுக்கு சிறந்த வாஸ்து இடமாகும்.இந்த திசைகள் வாஸ்து சாஸ்திரத்தின்படி மங்களகரமானதாகவும் கருதப்படுகிறது.
ஆக வாழ்க்கை நம்முடைய ஆன்மா அமைதி பெறவே இருக்கிறதே தவிர பணம் புகழ் குவிக்க அல்ல.வாழ்க்கை கூட்டி செல்லும் பாதையில் நமக்கு கிடைக்கும் சில பரிசுகள் காலம் மாறும் பொழுது வேறொருவருடையதாகிறது.நிரந்தரம் இல்ல வாழ்க்கையில் அமைதியை நாடி செல்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |