வீட்டில் மிகவும் கவனமாக கையாளவேண்டிய 3 பொருட்கள்
இந்த பூமியில் மனிதாக பிறக்கவே ஒரு பிராப்தம் வேண்டும்.அப்படியாக நாம் செய்யும் செயல் ஒவ்வொன்றுக்கும் பின்னால் இறைவன் அருள் இருந்தால் மட்டுமே செய்த வேலைக்கான முழு பலனை பெற முடியும்.அந்த வகையில் சிலர் எவ்வளவு கடினமாக உழைத்தாலும் சம்பாதித்த பணம் கையில் தங்குவதில்லை.
காரணம் அவர்களின் கால சூழ்நிலையாக இருந்தாலும் இறைவனின் அனுகிரகம் கட்டாயமாக இருக்க வேண்டும்.அப்பொழுது தான் வீண் செலவுகள் நஷ்டங்கள் உண்டாகாமல் இருக்கும்.அப்படியாக ஒருவரின் பொருளாதார வளர்ச்சி சரியான முறையில் அமையவும்,வீட்டில் கடன் தொல்லை ஏற்படாமல் இருக்கவும் நாம் சில விஷயங்களை கடைபிடித்தாலே போதும்.அவை என்ன விஷயங்கள் என்று பார்ப்போம்.
கல் உப்பு:
கல் உப்பின் சிறப்புகளை பற்றி அனைவரும் அறிவோம்.அதாவது பாற்கடலை கடையும்போது அதிலிருந்து அமிர்தம் வந்தது.அதில் தெய்வ திருமகள் மகாலக்ஷ்மியும் தயார் வந்தார்.அந்த கடலில் கிடைக்கும் பொருள் தான் உப்பு.உப்பு மஹாலக்ஷ்மியின் அம்சமாகவே பார்க்க படுகிறது.
ஆக,எந்த சூழ்நிலையிலும் நாம் கல் உப்பை குறைய விடக்கூடாது.அது குறைய குறைய நாம் முன்னதாகவே புதிதாக வாங்கி நிரப்பி விடவேண்டும்.மேலும்,கல் உப்பை வெள்ளிக்கிழமை வாங்கினால் சிறந்த பலன் கிடைக்கும்.வீட்டில் செல்வம் அதிகரிக்க செய்யும்.
அரிசி:
தானியங்களில் மிக முக்கிய தானியமாக அரிசி இருக்கிறது.அதனால் நம் வீட்டில் பச்சரிசியையோ அல்லது சாப்பாட்டிற்கு பயன்படுத்தும் அரிசியையோ குறைவில்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
அரிசி சந்திர பகவானின் அம்சமாகக் கருதப்படுகிறது.ஒருவருக்கு சந்திர பகவானின் அருள் இல்லை என்றால் அவர்களால் எந்த முடிவும் சரியாக எடுக்க முடியாது.ஆதலால் அரிசி எப்பொழுதும் குறையாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
துவரம் பருப்பு:
நாம் உணவிற்கு பயன் படுத்தும் துவரம் பருப்பு செவ்வாய் பகவானின் அம்சமாகக் கருதப்படுகிறது.ஒருவருக்கு செவ்வாய் பகவானின் அருள் இல்லை என்றால் தான் கடன் வாங்கும் வாய்ப்புகள் உருவாகும்.அதே போல் செவ்வாய் பகவானின் அருள் இருந்தால் நாம் வாங்கிய கடனை அடைத்து மகிழ்ச்சியாய் வாழும் அளவிற்கு அதீத பொருளாதார அதிர்ஷ்டம் கொடுப்பார்.
ஆக இவ்வளவு முக்கியமான பொருட்களை நாம் கட்டாயம் வீட்டு சமையலறையில் தீர்ந்து போகாமல் பார்த்து கொள்ள வேண்டும்.அப்பொழுது தான் குடும்பத்தில் நிதி நெருக்கடிகள் உண்டாகாமல் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ முடியும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |