ஒருவருக்கு பித்ரு சாபம் ஏற்பட்டால் என்ன ஆகும்?கருட புராணம் சொல்வது என்ன?
நன்றி மறவாமை என்பது மனிதர்களுக்கு மிக முக்கியமான ஒன்று.அப்படியாக நம்முடைய வீட்டில் முன்னோர்கள் குடும்ப உறுப்பினர்கள் மரணம் அடைந்து விட்டாலும் அவர்களை முறையாக மரியாதை செய்து அவர்களுக்குரிய தர்ப்பணம் செய்ய வேண்டும்.அதற்காக தான் அமாவாசை என்ற ஒரு நாள் கொடுக்க பட்டு இருக்கிறது.
அந்த வகையில் மாதம்தோறும் அமாவாசை வந்தாலும் ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி அமாவாசை சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.அதிலும் தை அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.அதாவது,தை அமாவாசை அன்று பித்ரு லோகம் புறப்படும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது மிகச் சிறந்த பலன்களை அளிக்கும்.
அதே நேரத்தில் நம்முடைய கடைமைகளை சரியாக செய்யவில்லை என்றாலும் பித்ருகளின் சாபம் உண்டாகும்.அவ்வாறு ஒருவருக்கு பித்ரு சாபம் ஏற்பட்டால் எவ்வாறு பாதிப்புக்குள்ளாவார்கள் என்று கருட புராணம் சொல்கிறது.அதை பற்றி பார்ப்போம்.
ஒருவர் தை அமாவாசை அன்று முறையாக விரதம் இருந்து முன்னோர்களுக்கு வழிபாடு செய்தால் அவர்கள் வாழ்க்கையில் உண்டான எப்பேர்ப்பட்ட தடைகளும் அவர்களின் ஆசியால் விலகும்.அதே போல் தை அமாவாசைக்கும், ஆடி அமாவாசைக்கும் ஒரு தொடர்பு உண்டு.
அதாவது,ஆடி அமாவாசை அன்று பித்துரு லோகத்தில் இருந்து உலகிற்கு வரும் முன்னோர்கள், மகாளய அமாவாசையில் நம் வீட்டு முன்பு நின்று நாம் படைக்கும் உணவுகளையும் தர்ப்பணங்களையும் ஏற்றுக் கொள்கின்றனர்.
பிறகு அவர்கள் தை அமாவாசையில் மீண்டும் பித்ரு லோகம் புறப்பட்டுச் செல்வதாக ஐதீகம். அதன் காரணமாகத் தான் இந்த மூன்று அமாவாசைகளும் அதிக முக்கியத்துவம் கொடுத்து நாம் வழிபாடு செய்து வருகின்றோம்.
ஒவ்வொரு மனிதனுக்கும் அவனின் மறைந்த தாய், தந்தை, தாத்தா,உள்ளிட்ட முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய முக்கிய கடமை இருக்கிறது.அதன் காரணமாகத் தான் சாதத்தை ஆறு பிண்டங்களாக வைத்து எள், தண்ணீர், தர்பை கொண்டு அவர்களை பூஜிக்க வேண்டும்.இவ்வாறு ஆறு பிண்டங்களை இணைத்து காகத்திற்கு வைக்கும் போது நம் முன்னோர்களை அவற்றை உணவாக எடுத்துக் கொள்வதாக நம்பிக்கை.
இவ்வாறு செய்யும் பொழுது அவர்களின் மனம் சாந்தம் கொள்ளும்.நம் மீது ஏதேனும் கோபம்,குறைகள் இருந்தால் அவை விலகும். மேலும்,இவ்வளவு முக்கியமான நாளில் நாம் பித்ருக்களுக்கு நம்முடைய கடமை செய்யாவிட்டால் மிக பெரிய பாதிப்புகளை சந்திக்கக்கூடும் என்று சொல்கிறது கருட புராணம்.
ஒருவர் அவர்களின் 'பித்ருக்களின் சாபத்திற்கு ஆளாகிவிட்டால் தெய்வத்தால் கூட கருணை காட்ட முடியாது' என்கிறது கருட புராணம். எனவே நிச்சயமாக தை அமாவாசையான இன்று உங்கள் முன்னோர்களுக்கு வழிபாடு நடத்துவது சிறந்த பலன்களை தரும்.
ஆக நம்முடைய வழிகாட்டியாக இருந்த முன்னோர்களுக்கு நம்முடைய கடமையை சிறப்பாக செய்ய நம் வாழ்க்கை சிறப்பாக அமையும்.நமக்கு துன்பம் வரும் வேளையில் நம்முடன் இருந்து நம்மை காப்பார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |