இன்றைய ராசி பலன்(31.01.2025)

Report

மேஷம்:

நீங்கள் நினைத்ததை சாதிப்பீர்கள்.உங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள்.எதையும் ஒருமுறைக்கு பல முறை யோசித்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.நன்மையான நாள்.

ரிஷபம்:

தொழிலில் முன்னேற்றம் இருக்கும்.வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபத்தை பெறுவீர்கள்.வரும் எதிர்ப்புகளை தைரியமாக சமாளித்து வெற்றி காண்ப்பீர்கள்.குடும்பத்தில் நற்செய்தி கிடைக்கும்.

மிதுனம்:

சிலர் கோயில் வழிபாட்டில் கலந்து கொள்வீர்கள்.குடும்பத்தில் குழப்பங்கள் உண்டாகும்.நிதானமாக செயல்படவேண்டும்.சகோதரன் வழியில் நல்ல ஒற்றுமை இருக்கும்.நம்பிக்கையான நாள்.

கடகம்:

நம்பிக்கையுடன் மேற்கொண்ட வேலை இழுபறியாகும். தேவையற்ற பிரச்னைகள் தேடிவரும்.உங்கள் வியாபார ரகசியங்களை தெரிந்து கொள்ள சிலர் முயற்சிப்பர். பேச்சில் கவனம் அவசியம்.

சிம்மம்:

இன்று வியாபாரம் பற்றிய தகவல்களை பற்றி பிறரிடம் பகிர்ந்து கொள்ளவேண்டாம்.நண்பர்கள் உதவியால் சிலருக்கு ஆதாயம் உண்டாகும்.சிலர் வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம்.நினைத்ததை சாதிக்கும் நாள்.

கன்னி:

குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை தீரும். எதிரிகள் தொல்லை நீங்கும். வழக்கு சாதகமாகும்.தொழிலில் அக்கறை செலுத்துவீர். வருமானம் உயரும். உங்கள் தேவைகள் நிறைவேறும்.

செல்வ செழிப்புடன் வாழ இந்த 4 பொருட்களை வசந்த பஞ்சமி அன்று தானம் செய்யுங்கள்

செல்வ செழிப்புடன் வாழ இந்த 4 பொருட்களை வசந்த பஞ்சமி அன்று தானம் செய்யுங்கள்

துலாம்:

இறைவழிபாட்டில் அதிகம் கவனம் செலுத்துவீர்கள்.மனதில் உள்ள கவலைகள் முற்றிலுமாக விலகும்.பெற்றோர்கள் உங்களுக்கு துணையாக இருப்பார்கள்.எதையும் சாதிக்கும் நாள்.

விருச்சிகம்:

சூழ்நிலை அறிந்து செயல்படுவீர். வருவாயில் ஏற்பட்ட தடைகள் விலகும்.இழுபறியாக இருந்த வேலையை முடிப்பீர்கள். நிதிநிலை உயரும். எதிர்பார்த்த தகவல் வரும்.சுப நிகழ்ச்சியில் பங்கேற்பீர்.

தனுசு:

பிள்ளைகளை பற்றிய கவலை அதிகரிக்கும்.கணவன் மனைவி இடையே நல்ல பிணைப்பு உருவாகும்.தாய் வழி உறவு துணையாக இருப்பார்கள்.மனதில் நம்பிக்கை அதிகரிக்கும்.நற்செய்தி கிடைக்கும்.

மகரம்:

வியாபாரத்தில் உங்கள் முயற்சி வெற்றியாகும். சாதுர்யமாக பேசி வேலைகளை முடிப்பீர்.நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். பணியிடத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும்.மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கும்பம்:

குடும்பத்தில் எதிர்பாராத பிரச்னை தோன்றும். உங்கள் எண்ணத்திற்கு மாறாக சில செயல்கள் நடைபெறும். புதிய முயற்சியை ஒத்தி வையுங்கள். பிறரை அனுசரித்துச் செல்வதால் உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.

மீனம்:

உடல்நிலையில் அக்கறை செலுத்துவீர்கள்.சிலருக்கு எதிர்பார்த்த தகவல் வந்து சேரும்.மனதில் ஒரு சில சோர்வு உண்டாகும்.பிறருக்கு கடன் கொடுப்பதை தவிர்க்கவும்.அதனால் சில பிரச்சனைகள் உருவாகும்.     

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.

       

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US