இன்றைய ராசி பலன்(03.01.2025)

Report

மேஷம்:

இன்று உங்கள் வீட்டில் விருந்தினர்கள் வருகையால் சந்தோசம் பெருகும்.பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.பணத்தேவை அதிகரிக்கும்.மனதில் தெளிவு பிறக்கும்.புதிய தொழில் தொடங்குவதை பற்றி ஆலோசனை செய்வீர்கள்.

ரிஷபம்:

நீண்ட நாட்களாக வாங்கிய கடனை அடைக்க நல்வழி பிறக்கும்.வியாபாரத்தில் உங்களுக்கான பங்கு சரியான நேரத்தில் வரும்.இருந்தாலும் பிறரிடம் பேசும் பொழுது எச்சரிக்கையாக பேசவேண்டும்.

மிதுனம்:

இன்று மதியம் மேல் சற்று கவனமாக இருக்க வேண்டிய நாள்.நேற்று வரை இருந்த பிரச்சனை ஒரு நல்ல முடிவிற்கு வரும்.எதிரிகள் தொல்லை அதிகரிக்கும்.இறைவழிபாடு மட்டுமே கைகொடுக்கும்.

கடகம்:

எந்த ஒன்றையும் உங்கள் பார்வையில் வைத்து செயல்படுவது நன்மையாகும். பிறரை நம்பி மேற்கொள்ளும் வேலை இழுபறியாகும்.தேவையற்ற பிரச்னைகள் தேடிவரும்.

சிம்மம்:

உங்கள் எதிர்பார்ப்பு முற்றிலுமாக நிறைவேறும்.கணவன் மனைவி விட்டு கொடுத்து செல்வது நல்லது.பெற்றோர்கள் உங்களுக்கு துணையாக இருப்பார்கள்.கோபத்தை குறைத்து கொண்டால் சிறந்த நாளாக அமையும்.

கன்னி:

தடைபட்டிருந்த வேலைகள் நடந்தேறும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்.உங்கள் முயற்சியில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும்.

முருகப்பெருமான் வீசிய வேல் இன்றும் இலங்கையில் உள்ளது தெரியுமா?

முருகப்பெருமான் வீசிய வேல் இன்றும் இலங்கையில் உள்ளது தெரியுமா?

 

துலாம்:

இன்று வேலை பளு அதிகரிக்கும்.அலுவலகத்தில் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும்.மனதில் உள்ள பாராம் படிப்படியாக குறையும்.எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செயல்படவேண்டிய நாள்.

விருச்சிகம்:

கவனமாக செயல்படுவதால் உங்கள் வேலைகள் நடந்தேறும். வருமானம் திருப்தி தரும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும்.தாய்வழி உறவுகளால் உங்கள் வேலைகள் முடியும்.

தனுசு:

வீட்டில் வேலை பளு அதிகரிக்கும்.சகோதரன் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது அவசியம்.நீண்ட நாள் கனவு நிறைவேறும்.மாலை மேல் நற்செய்தி வரும்.அமைதி காப்பது நல்லது.

மகரம்:

வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னையை சரி செய்வீர். வருவாய் அதிகரிக்கும். நினைத்த வேலைகள் நடந்தேறும்.வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

கும்பம்:

குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். உங்கள் வளர்ச்சிக்கு வழி தெரியும்.உங்களை ஏமாற்றி வந்தவரை கண்டுகொள்வீர்கள்.

மீனம்:

வரவு செலவில் கவனமாக இருக்க வேண்டும்.தர்மம் காத்து நடக்கவேண்டும்.அதிகமாக பேசுவதை குறைந்து கொண்டால் வரும் பிரச்சனையை தவிர்க்கலாம்.திடீர் செலவுகள் வரும்

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US