தீராத மன வலியா?வானம் பார்த்து இந்த மந்திரம் சொல்லுங்கள்
உலகில் வாழும் உயிர்களில் யாருக்கு தான் துன்பம் இல்லை.எல்லோரும் ஒரு வகையான துன்பம் அனுபவித்து கொண்டு தான் இருக்கின்றோம்.அந்த வகையில் நல்லவர்கள் எப்பொழுதும் பிறரால் கொடுக்கும் துன்பத்தை தாங்கி கொள்வார்கள்.
ஆனால் அவர்களுக்கு மிக பெரிய மனவலியே,சக மனிதன் இப்படி தர்மநெறி தவறி நடக்கின்றானோ என்பதில் தான் இருக்கிறது.ஆனால்,கெட்டவர்களுக்கு இந்த நல்லவர்கள் உலகில் இருப்பதே ஒரு வகையான துன்பம் தான்.ஆக இந்த தர்மம்,அதர்மம் போராட்டம் காலம் காலமாக நடக்கும் மிக பெரிய யுத்தம்,ஆகும்.
நல்லவர்கள் துன்பத்தில் துடித்தாலும்,கெட்டவர்கள் இன்பத்தில் மிதந்தாலும் சரியான நேரத்தில் அதை மாற்றி அமைக்க ஒருவர் வந்து நிற்பார்.அவர் தான் கிருஷ்ணர்.தர்மத்தின் தலைவன்.அவரை போல் சரியாக கணக்கிட்டு சரிசமாக தர்மம் வகுத்து உலகில் வாழ எவராலும் கற்று கொடுக்க முடியாது.
ஆக யாராக இருப்பினும்,எவராக இருப்பினும்.எவ்வளவு பெரிய துன்பம் கொடுத்தாலும்,கிருஷ்ண பகவானை சரண் அடையுங்கள்.நாம் இருந்தாலும் இல்லை என்றாலும் அவர் அவர் செய்த கர்ம செயலுக்கு பகவான் சரியான பதில் கொடுத்துவிடுவார்.
உங்கள் நியாயம் உங்கள் பக்கம் வந்து நிற்கும்.ஆக தீராத துன்பமும்,பிறரால் நாம் கஷ்ட படும் பொழுது வானத்தை பார்த்து மூன்று முறை "போகட்டும் பரந்தாமனுக்கே"என்று சொல்லுங்கள்.உங்கள் கவலைகள் துன்பத்தை அவன் தாங்கி கொண்டு உங்களுக்காக வந்து நிற்பான்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |