ஜீவ சமாதிகளுக்கு போனால் எப்படி வழிபட வேண்டும்?

By வாலறிவன் Jan 28, 2025 09:00 AM GMT
Report

இன்றைய காலத்தில் சித்தர்களின் வழிபாடு அதிகரித்து வருகின்றது, ஆனால் ஒரு ஜீவ சமாதிக்கு சென்றால் அங்கு எப்படி வழிபட வேண்டும் என்று பரவலாக தெரியவே இல்லை.பொதுவாக கோவிலுக்கு சென்றால் அர்ச்சனை செய்வோம், காணிக்கை செலுத்திடுவோம், அன்னதானம் செய்வோம்.

இன்னும் என்னன்னவோ செய்கின்றோம், இது எல்லாம் ஒவொரு கோவிலுக்கும் வேறுபடுகின்றது. ஆனால் ஒரு சித்தர் ஐக்கியமாகி இருக்கும் சமாதிக்கு சென்றால் இதையெல்லாம் செய்ய கூடாது, அங்கு மந்திரங்களோ, மணி ஓசை எழுப்புவதோ, ஆரத்தியோ, அர்ச்சனையோ செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

  ஒரு சித்தர் தான் உடலோடு இருந்த காலத்தில் தனக்கு உதவியாக இருந்த எல்லோருக்கும் ஏதேனும் ஒரு பிரதி உபகாரம் செய்து இருப்பார் ஆனாலும் அவர் எத்தனை வருடங்கள் வாழ்ந்தாரோ அத்தனை வருடங்கள் அவருக்கு வாழ இடம் கொடுத்த இந்த சமூகத்திற்கும் அதன் நலனுக்கும் தன் முழுமையான நன்றியை செலுத்த்த வேண்டும் என்பதற்க்காக தான் சமாதி.

ஜீவ சமாதிகளுக்கு போனால் எப்படி வழிபட வேண்டும்? | Jeeva Samadhi Valipaadum Palangalum

ஆக போகும் நாளுக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு முன்வே ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து, அங்கு அதிர்வலைகளை உணர்ந்து அமர்ந்து, தான் எங்கிருந்து வந்தோமோ அந்த மூலத்துடன் இணைந்து இறைவனாகவே மாறுவார், அப்போது அவர் உடல் எந்த நிலையில் இருந்ததொ அப்படியே பல நுற்றாண்டுகளுக்கும் இருக்கும், சிதையாது அழியாது.

அவரது உடலில் இருந்து வரும் ஒருவிதமான அதிர்வலை அல்லது காந்த அலை வருபவர்களின் நோக்கத்தை நிறைவு செய்யும், இதனால் அவர் தனக்கு உதவி செய்த பிரபஞ்சதத்தில் உற்பத்தியான உயிர்களுக்கு தனது சேவையை செய்து கொண்டு இருக்கின்றார் என்று அர்த்தம்.

வீட்டின் பூஜையறையில் செய்யக்கூடாத 8 தவறுகள்.., என்ன தெரியுமா?

வீட்டின் பூஜையறையில் செய்யக்கூடாத 8 தவறுகள்.., என்ன தெரியுமா?

அதனால் ஜீவ சமாதிகளில் ஒரு அமைதி எப்போதும் இருக்கும், அங்கு அர்ச்சனை, மணி அடிப்பது மந்திரம் சொல்வது எல்லாம் அந்த அமைதியை குலைக்கும் செயல்கள், இதை சமாதியில் இருப்பவர் விரும்ப மாட்டார், அப்படி வழிபடவேண்டிய அவசியமும் இல்ல அப்படியானால் ஜீவ சமாதிகளுக்கு போனால் எப்படி வழிபட வேண்டும்? இனி எப்போது ஜீவ சமாதிகளுக்கு சென்றாலும் இதை பின்பற்றுங்கள்.

சமாதிக்கு அருகில் செல்லும் பொது பேச கூடாது, சத்தம் எழுப்பும் எந்த செயல்களையும் செய்ய கூடாது, அங்கு அமர்ந்து கண்ணை முடி உங்களுக்கு தெரியும் இருளை பாருங்ககள், இதுவே ஆதியின் அடையாளம் ஒரு 5 நிமிடமாவது அந்த இருளை கவனியுங்கள், பின்பு அந்த இருளே சமாதியில் இருக்கும்.

ஜீவ சமாதிகளுக்கு போனால் எப்படி வழிபட வேண்டும்? | Jeeva Samadhi Valipaadum Palangalum

சித்தராக எண்ணி வாய் திறக்காமல் எண்ணத்தாலே அவரிடம் பேசுங்கள், "நான் இங்கு வர அனுமதி அளித்ததற்கு நன்றி என்று கூறுங்கள், உங்களுக்கு என்ன கொடுக்க வேண்டும் எப்போது கொடுக்க வேண்டும் என எல்லாம் தெரியும், நீங்கள், எதுவும் கேட்க வேண்டாம்.

அங்கு நீங்கள் அமர்ந்து இருக்கும் 5 நிமிடத்திலேயே உங்கள் என்ன அலைகள் நுணங்கள் தேவை என்ன என்பதை அவருக்கு தெரிவித்துவிடும், அவரது சமாதியில் இருந்து வரும் காந்த அலை உங்கள் உடலை ஊடுருவி செல்லும்.

அப்போது உங்கள் மனம் அமைதியடைய என்ன வேண்டுமோ அதை தானாக கொடுத்டுவிடும், உங்கள் வாழ்க்கைக்கு தேவையானதையும் தந்துவிடும், நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் அங்கு அமைதியாய் அமர்வது மட்டும் தான். அந்த சித்தரின் முழு அருளை பெற இதை மட்டுமே செய்ய வேண்டும்,செய்து பாருங்கள் போக போக அவர் உங்களை மானசீகமாக வழிநடத்துவதை உணருவீர்கள் .

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US