2026: சனி வக்கிர பெயர்ச்சி.. சவாலை சந்திக்க போகும் முக்கிய ராசிகள் யார் ?
வேத ஜோதிட சாஸ்திரத்தில் சூரிய பகவான் கடக ராசியில் இருக்கிறார். குரு பகவானும் கடக ராசியில் உச்சம் பெற்று இருக்கிறார். சந்திர பகவான் தனுசு ராசியில் நுழைகிறார். அதை போல், செவ்வாய் ரிஷப ராசியிலும், புதன் பகவான் மிதுன ராசியிலும், சுக்கிர பகவான் சிம்ம ராசியிலும், சனி பகவான் மீன ராசியிலும் இருக்கின்றனர்.
மேலும், ஜூலை 27ஆம் தேதி காலை மீன ராசியில் ரேவதி நட்சத்திரத்தில் சனி வக்கிர பெயர்ச்சி அடைகிறார். இதனால் ஒரு சில ராசிகளுக்கு மீண்டும் பிரச்சனை வருவதற்கான வாய்ப்புகள் உண்டு என்று சொல்லப்படுகிறது. அவை எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

மேஷம்:
மேஷ ராசியினருக்கு நான்காம் வீட்டில் குரு உச்சத்தில் இருப்பதால் வீடு மற்றும் சொத்து தொடர்பான விஷயங்களில் இவர்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும்.
சந்திர பகவானுடைய மாற்றத்தால் இவர்களுக்கு மன உறுதி மேம்படும். உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டு. இருப்பினும் உடல் நலனில் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டிய காலகட்டமாக உள்ளது. வீண் செலவுகளை குறைத்துக் கொள்வது அவசியம்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு எழுத்து அறிவு மற்றும் பயணத்திற்கான மிகவும் சாதகமான பலன்களாக இருக்க போகிறது. இருப்பினும் பொருளாதாரதம் தொடர்பான விஷயங்களில் இவர்கள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.
தொழில் தொடங்குவதை பற்றியும் சமுதாயத்தில் உயர்ந்த நிலைக்கு செல்வதை பற்றி ஆலோசனை செய்வீர்கள். இருந்தாலும் ஒரு சில சூழ்ச்சிகள் காரணமாக நீங்கள் பிரச்சனை சந்திப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.
துலாம்:
இவர்களுக்கு தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும். பதவி உயர்வு கிடைக்கப் போகிறது. சமுதாயத்தில் நற்பலன்கள் உண்டாகும்.
நோய் கடன் தீரும் என்றாலும் வழக்கு விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தினரடையை விட்டுக் கொடுத்து செல்வது அவசியம். தேவை இல்லாத வாக்குவாதங்கள் பேச்சு வார்த்தைகள் வைத்துக் கொள்வதை தவிர்ப்பது நல்லது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |