2026: ஜூன் 2 ஆம் தேதி முதல் கோடீஸ்வர யோகம் பெறப்போகும் ராசிகள்.. உங்கள் ராசி உள்ளதா?
ஜோதிடத்தில் தேவ குருவாக கருதக்கூடிய குரு பகவான் முக்கியமானவராக இருக்கிறார். அந்த வகையில் குரு பகவான் அருட்பாவை ஒருவருக்கு கிடைத்துவிட்டால் அந்த ராயினர் மிகப்பெரிய அளவில் உயரத்தை தொட்டுவிடுவார்கள்.
அந்த வகையில், திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் குரு பகவான் ஜூன் இரண்டாம் தேதி அவருடைய இடத்தை மாற்றுகிறார். அதாவது குரு பகவான் மிதுன ராசியில் இருந்து அவருடைய உச்ச ராசியான கடக ராசிக்கு இடம் மாறுகிறார். இந்த இடமாற்றம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டத்தை தேடி கொடுக்க போகிறது என்று பார்ப்போம்.

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி இவர்களுடைய வாழ்க்கையில் ஒரு நல்ல திருப்புமுனையாக அமையப்போகிறது. குடும்பத்தில் ஏற்பட்ட விரிசல்களை சரி செய்து மன மகிழ்ச்சியான சூழ்நிலையை உருவாக்குகிறது.
நினைத்த காரியங்கள் நிறைவேறும். ஆன்மீகத்தில் ஒரு சிலருக்கு அதிக ஈடுபாடு உண்டாகும். வெளியூர் பயணங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். சமுதாயத்தில் மதிப்புகள் உயரும்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி ஆனது இவர்களுக்கு நல்ல வசதி வாய்ப்புகளை கொடுக்கப் போகிறார். ஒரு சிலருக்கு ஆடம்பரமான பொருட்களின் சேர்க்கைகள் உண்டாகும். புதிய நிலம் வீடு வண்டி வாகனமாக கூடிய யோகம் கிடைக்கும்.
நீண்ட நாட்கள் முடிவிற்கு வராத காரியம் நல்ல முடிவை பெறும். புதிய வருமானம் பெறுவதை பற்றி சிந்திப்பீர்கள். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சியானது இவர்கள் வாழ்க்கையில் நல்ல செய்திகளை கொண்டு வந்து சேர்க்க போகிறது. மாணவர்களுக்கு இந்த காலகட்டம் அற்புதமாக அமையப்போகிறது.
உங்களுடைய தனித்திறமை, பேச்சுத் திறன் இவை எல்லாம் வெளிப்படும். சமுதாயத்தில் உங்களுக்கான மதிப்பு உயரும். சமுதாயத்தில் உயர்ந்த மனிதர்களின் அறிமுகம் உங்களுக்கு கிடைக்கும். பொருளாதார சிக்கல்கள் விலகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |