நாளைய ராசி பலன்(21-06-2025)
மேஷம்:
சொத்து வாங்கும் பொழுது மிக மிக கவனமாக இருக்க வேண்டும். கணவன் மனைவி விட்டுக்கொடுத்து செல்வது நன்மை தரும். பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள்.
ரிஷபம்:
இன்று மனதில் பல குழப்பங்கள் தோன்றி மறையும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்களுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகள் விலகும். அமைதி காக்க வேண்டிய நாள்.
மிதுனம்:
குடும்பத்திற்காக கடமைகளை செய்தாலும் உங்களுக்கு அவப்பெயர் உண்டாக வாய்ப்புகள் உள்ளது. மனதில் எதிர்மறை எண்ணங்கள் தோன்றி மறையும். தேவை இல்லாமல் பேசுவதை தவிர்ப்பது நன்மை தரும்.
கடகம்:
பழைய ஆசை ஒன்றை நிறைவேற்ற மனதளவில் உறுதியாக இருப்பது அவசியம். குடும்ப ஆதரவுடன் நல்ல பண ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. பணம் சம்பாதிப்பதில் ஆர்வம் காட்டுவார்கள்.
சிம்மம்:
கடின உழைப்பால் நினைத்ததை சாதிப்பீர்கள். தொழில் செய்யும் இடத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.
கன்னி:
உங்களுக்கு பிடித்த ஆடை ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். உங்கள் தொழில் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்வீர்கள். பொருளாதார ரீதியாக உண்டான சிக்கல் விலகும்.
துலாம்:
இன்று யாரிடமும் ரகசியமாக உங்கள் சொந்த வாழ்க்கையை பற்றி பகிர்ந்து கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் சந்தித்த சிக்கல்கள் எல்லாம் விலகி முன்னேற்றம் அடைவீர்கள்.
விருச்சிகம்:
தலைமைப் பண்பு அதிகரிக்கும். எதிர்மறை எண்ணங்களை புறக்கணிக்கவும். பணம் சம்பாதிக்க நாள் நன்றாக இருக்கிறது. கடினமான வார்த்தைகள், அதிகமாக பேசினால் மற்றவர்கள் வருத்தப்படலாம்.
தனுசு:
முக்கியமான முடிவுகளை எடுப்பதில் சிரமங்கள் உண்டாகலாம். பிறரின் உணர்வுகளை புரிந்து நடந்து கொள்வீர்கள். நீங்கள் சந்தித்த பிரச்சனைகள் வந்த வழி தெரியாமல் விலகி செல்லும்.
மகரம்:
எந்த வேலையை செய்யும் பொழுதும் மிகவும் கவனமாக செய்யவேண்டும். நண்பர்களின் துணையால் சந்தித்த பிரச்சனைகளை சமாளிப்பீர்கள். முக்கியமான முடிவுகளை எடுக்கும் நாள்.
கும்பம்:
உங்கள் கவனத்தை திசை திருப்ப தவறான அல்லது தவறான பிரச்சாரத்தை மக்கள் பரப்பலாம். மன அழுத்தத்தை உங்களை ஆட்கொள்ள விடாதீர்கள். நல்ல வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது.
மீனம்:
உங்களின் வேலையை சரியான நேரத்தில் செய்யமுடியாமல் சில சிரமங்களை சந்திக்க நேரலாம். இன்று முடிந்த வரை எந்த ஒரு புதிய முயற்சிகளையும் எடுக்க வேண்டாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |