இன்றைய ராசி பலன் (01-06-2025)

Report

மேஷம்:

இன்று உறவினர்கள் உங்களை தேடி வருவார்கள். எதையும் துணிந்து முடிவு எடுக்கும் திறன் உண்டாகும். சிலருக்கு மதியம் மேல் உடல் உபாதைகள் உண்டாகலாம். நண்பர்களுடன் நல்ல நேரத்தை செலவு செய்வீர்கள்.

ரிஷபம்:

வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். நீண்ட நாட்களாக வாங்க வேண்டும் என்று நினைத்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதில் தெளிவு உண்டாகும்.

மிதுனம்:

கடந்த கால வாழ்க்கையும் தவறையும் எண்ணி வருத்தம் கொள்வீர்கள். பெற்றோர்கள் உங்களுக்கு எதிராக செயல்பட வாய்ப்புகள் உள்ளது. சகோதிரி வழி உறவால் உங்களுக்கு சில சிக்கல்கள் உருவாகும்.

கடகம்:

உங்களது முயற்சியில் வெற்றி உண்டாகும். இழுபறியாக இருந்த பிரச்னையில் தீர்வு காண்பீர். மனதில் தேவையற்ற சிந்தனை மேலோங்கும். இனம் புரியாத குழப்பத்திற்கு ஆளாவீர்.

சிம்மம்:

இன்று வியாபாரத்தில் சில எதிர்ப்பாராத சில சிக்கலை சந்திப்பீர்கள். மனைவி வழி உறவால் ஆதாயம் கிடைக்கும். பிள்ளைகள் நலனில் முழுமையான அக்கறை செலுத்துவீர்கள்.

கன்னி:

 உங்கள் நம்பிக்கை வெற்றியாகும். உடல்நிலை சீராகும். மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வரவேண்டிய பணம் வசூலாகும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். 

துலாம்:

இன்று உங்கள் வாழ்க்கை பிரச்சனைகளை சரி செய்வீர்கள். சிலர் வேலைக்காக வெளியூர் பயணம் மேற்கொள்ளலாம். குருவின் பார்வை உங்களுக்கு இருப்பதால் உங்கள் செல்வாக்கு உயரும்.

'கோவிந்தா' என்று 10 லட்சம் முறை எழுதினால் கிடைக்கிறது விஐபி தரிசனம்

'கோவிந்தா' என்று 10 லட்சம் முறை எழுதினால் கிடைக்கிறது விஐபி தரிசனம்

விருச்சிகம்:

சாமர்த்தியமாக செயல்படுவீர்கள் தடைபட்டிருந்த வேலைகள் நடந்தேறும். வரவேண்டிய பணம் வரும். பிறரை நம்பி நீங்கள் ஈடுபடும் வேலையில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

தனுசு:

பண நெருக்கடியால் உங்களுக்கு நீங்கள் சந்தித்த துன்பங்கள் விலகும். வெளியூர் பயணத்தை தவிர்ப்பது நன்மை தரும். இன்று எதிர்ப்பாராத மனக்கசப்புகள் உறவினர்களிடம் தோன்றும்.

மகரம்:

வாழ்க்கைத் துணையின் ஆலோசனை நன்மை தரும். சிலர் வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். நண்பர்களால் உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

கும்பம்:

உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். உற்சாகத்துடன் செயல்பட்டு விரும்பியதை அடைவீர். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகுவர். பிரபலங்களின் ஆதரவு கிடைக்கும்.

மீனம்:

நினைத்த காரியம் நடக்க கால தாமதம் ஆகலாம். சிலருக்கு வெளியூர் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்சனை விலகும்.     

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US