நாளை வீட்டில் செய்ய வேண்டிய கார்த்திகை முதல் வெள்ளிக்கிழமை வழிபாடு
தீராத கஷ்டமும் இறைவழிபாட்டில் தீர்ந்து போகும்.அப்படியாக ஒளி நிறைந்த கார்த்திகை மாதம் முதல் வெள்ளிக்கிழமை அன்று வீட்டில் செய்ய வேண்டிய வழிபாட்டை பற்றி பார்ப்போம். இந்த வழிபாட்டை நாளை காலை 6 மணி முதல் 7 மணிக்குள் இந்த வழிபாட்டை செய்யவேண்டும்.
முதலில் நம்முடைய நிலைவாசலில் கோலம் போட்டு நிலை வாசல் படிகளுக்கு மஞ்சள் குங்குமம் வைத்து கொள்ள வேண்டும்.பிறகு ஒரு சிறிய கிண்ணத்தில் குங்குமம் மற்றும் பன்னீர் ஊற்றி கலந்து வைத்து கொள்ள வேண்டும்.வரையும் அளவிற்கு அந்த கலவையை தயார் செய்வது அவசியம்.
பிறகு அதை தொட்டு நிலை வாசலில் ஸ்வஸ்திக் சின்னத்தை வரைய வேண்டும்.பிறகு பூஜை அறையில் விளக்கு ஏற்ற வேண்டும்.கார்த்திகை மாதம் என்பதால் வீட்டின் நிலை வாசலில் இரண்டு விளக்கு ஏற்றி வைக்கலாம்.நைவேத்தியமாக கற்கண்டு வைத்து எளிமையாக இந்த காலை வேலை பூஜையை நிறைவு செய்யலாம்.
பிறகு மாலை பூஜைக்கு மஹாலக்ஷ்மி தாயாருக்கு நம்முடைய கைகளால் வெள்ளை நிற பிரசாதம் செய்து படைப்பது சிறந்த பலனை கொடுக்கும்.கற்கண்டு சாதம், அக்கார வடிசல், இல்லையென்றால் பால் பாயாசம் செய்து வைப்பதும் சிறப்பு.
இல்லையென்றால் உங்களுக்கு தெரிந்த நெய்வேத்தியம் இனிப்பு நெய்வேத்தியம் செய்து வைக்கலாம். மாலை நேரம் விளக்கு ஏற்றும் பொழுது குறிப்பாக விளக்கில் நெய் ஊற்றி தாமரை தண்டு திரி போட்டு மஹாலக்ஷ்மியின் மந்திரம் பாடல் பாடி பூஜை செய்யவேண்டும்.
மந்திரங்கள் எதுவும் தெரியவில்லை என்றால் ‘ஓம் மகாலட்சுமியே போற்றி போற்றி’ என்ற மந்திரத்தை சொல்லி வழிபாடு செய்யலாம்.பிறகு சாம்பிராணி தூபம் போட்டு தீப ஆராதனை செய்து பூஜையை நிறைவு செய்யலாம்.பிறகு வழிபாட்டிற்கு வைத்த நைவேத்தியத்தை அக்கம் பக்கத்தினர் கொடுத்து தாமும் சாப்பிடலாம்.
தீராத கஷ்டத்தை தீர்க்க கூடியவள் மஹாலக்ஷ்மி தயார்.பிரச்சனைகளை சந்தித்து கொண்டு இருப்பவர்கள் மனம் துவண்டு போகாமல் நாளை வெள்ளிக்கிழமை இந்த சிறப்பு பரிகாரம் செய்ய நிச்சயம் வீட்டில் நல்ல நிகழ்வு நடக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |