தர்மத்தின் ரகசியத்தை கர்ணனுக்கு உணர்த்திய கண்ணன்
நாம் அனைவரும் மஹாபாரதத்தை பற்றி கேள்வி பட்டு இருப்போம்.தர்மம் அதர்மம் போரில் தர்மமே வெற்றி பெற்றது.மஹாபாரதம் வாழ்க்கையின் மிக பெரிய சொத்து என்றே சொல்லலாம்.மனிதன் மனமும் சிந்தையும் சரியாக இருக்க அதற்கே கடவுளே இறங்கி வருவார் என்பதற்கு மஹாபாரதம் மிக பெரிய சாட்சி.
அப்படியாக ஒரு முறை மஹாபாரத போர் நடைபெறும் பொழுது கிருஷ்ணர் கர்ணனை சந்தித்து கர்ணனின் தாய் குந்தி தேவி என்றும் கர்ணன் தான் பாண்டவர்களின் மூத்த சகோதரன் என்றும் அதனால் அஸ்தினாபுரத்தின் சக்ரவர்த்தியாக மூத்தவரான கர்ணனுக்கே முடி சுட்டப்படவேண்டும் அதுவே தர்மம் அதற்கு நிச்சயம் யுதிஷ்டிரன் ஒப்பு கொள்வர் என்று கண்ணன் கர்ணனின் பிறப்பின் ரகசியத்தை சொன்னார்.
அதோடு கர்ணனை அதர்மம் செய்கின்ற துரியன் பக்கம் நிற்காமல் கர்ணனின் சகோதரன் பக்கம் நின்று தர்மத்தை கடை பிடிக்கும் மாறு கண்ணன் கூறினார். இதை எல்லாம் அமைதியாக கேட்டு கொண்டு இருந்து கர்ணன் கண்ணன் பேசி முடித்ததும் அவரை பார்த்து என்னை தர்மத்துடன் நடக்க சொல்கிறாயே?எது தர்மம் கண்ணா?
பிறந்த பச்சிளம் குழந்தையை பற்றி எதுவுமே சிந்திக்காமல் ஆற்றில் விட்டு சென்றாள்.நான் வாழ்க்கை புரியாமல் துவண்டு போன நேரத்தில் எனது தந்தை ஆன சூரியனும் கண்டுகொள்ள வில்லை.ராதையின் மைந்தனாக வளர்ந்தேன்.
வேகமும் விவேகமும் கொண்டு கள்ளங்கபடமற்றவனாக இருந்த பொழுது பிறப்பறியாதவன் என்று கேலியும் கிண்டலும் என்று ஊர் தூற்றியது.ஆதலால் நான் எப்பவும் ராதையின் மைந்தனாகவே இருக்க விரும்புகிறேன்.ஒருபோதும் குந்தியின் மகனாக இருக்க எனக்கு துளியும் விருப்பம் இல்லை.
நான் யார்?சொல்ல கண்ணா?துரோணரோ நான் சத்ரியன் இல்லை என்று வித்தை கற்று தர மறுத்தார்.பரசுராமரோ நான் சத்ரியன் இல்லை என்று தெரிந்த பின் நான் கற்று கொண்ட வித்தை எல்லாம் மறந்து போகும் படி சாபம் கொடுத்தார்.
ஒருமுறை நான் அறியாமல் விட்ட அம்பினால் பசு இறந்தது அதற்கு பசுவின் உரிமையாளர் ஒரு நாள் நான் உதவியின்றி உயிர் மடிவேன் என்று அவர் ஒரு சாபம் கொடுத்தார்.ஏன்?என்னை பெற்ற தாய் குந்தி கூட அவளின் ஐந்து மகனின் உயிர் காக்கவே அவளை என் தாய் என்று அறிமுகம் செய்து கொண்டாள்.
இப்படி ஒன்றும் புரியாமல் ஆதரவு அற்ற நிலையில் அனைவராலும் வஞ்சிக்கப்பட்டு எங்கு ஆதரவு அளித்து கை கொடுத்த துரியோதனனுக்காக போர் புரிவதே தர்மம் என்றான் கர்ணன்.
கர்ணனுக்கு கிருஷ்ணர் கொடுத்த பதில்:
கர்ணா உன்னை போல் இங்கு எல்லோருக்கும் ஒருவித ஆதங்கம் இருக்கும்.என்னை பார்.நான் பிறந்ததோ சிறையில்.நானும் பிறந்தவுடன் தாயிடம் இருந்து பிரிக்க பட்டேன்.வளர்ந்தது மாட மாளிகையில் இல்லை மாட்டுக்கொட்டகையில்.என் வயது பிள்ளைகள் பள்ளிக்கு போகும் நேரத்தில் நான் மாடு மேய்த்து கொண்டு இருந்தேன்.
படிப்பு முடியும் வயதில் தான் அதாவது என்னுடைய 16 வயதில் தான் கல்வி கற்க தொடங்கினேன்.தாயாக தந்தையாக இருக்க வேண்டிய தாய் மாமனே என்னை கொல்ல முயற்சித்தார்.தினமும் மரணம் என்னை நெருங்கி சென்றது.என் மக்களைக் ஜராசந்த்திடனிமிருந்து காப்பாற்ற நான் மதுராவிலிருந்து துவாரகைக்கு என் மக்களோடு வந்தேன்.
கர்ணா இங்கே பார் நீ துரியனுடன் போரில் வென்றால் உனக்கு நாடும் புகழும் செல்வமும் கிடைக்கும்.ஆனால் நான் பாண்டவர்களுடன் போரிட்டால் எனக்கு என்ன கிடைக்கும்.நடந்த முடிந்த போருக்கு காரணமானவன் என்ற பழி மட்டுமே கிடைக்கும்.
ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் வலி துன்பம் வேதனை என்று காலம் அதனுடைய ஆட்டம் ஆடி சென்று இருக்கும்.ஆனால் நாம் ஒரு போதும் வஞ்சகம் கொள்ளாமல் தர்மத்தின் பக்கம் நிற்பதே நம்மை காக்கும் என்று கண்ணன் கர்ணனுக்கு உபதேசம் செய்தார்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |