கடன் சுமையை தீர்க்க உதவும் முருகன் பரிகாரம்

By Yashini Oct 08, 2024 11:05 AM GMT
Report

கடன் பிரச்சனை என்பது சிலருக்கு இருக்கும் ஒரு பெரிய பிரச்சனை.

சிலரை கடனை அடைப்பதற்காக கடுமையாக முயற்சி செய்வார்கள்.

ஆனால் எவ்வளவு முயன்றாலும், எவ்வளவு சம்பாதித்தாலும் கடனை அடைக்க முடியாமல், கடன் பிரச்சனையுடன் போராடிக் கொண்டிருப்பார்கள்.

கடன் சுமையை தீர்க்க உதவும் முருகன் பரிகாரம் | Kadan Theera Murugan Abisegam

அந்தவகையில், கடன் சுமை தீர்க்க உதவும் முருகன் பரிகாரம் குறித்து பார்க்கலாம்.

கடன் சுமை தீர பரிகாரம்

முருகப்பெருமானுக்கு உகந்த தினங்கள் பல இருந்தாலும் சில குறிப்பிட்ட தினங்கள் மிகவும் விசேஷமாக கொண்டாடக்கூடிய தினங்களாக திகழ்கிறது.

கார்த்திகை நட்சத்திர நாளில் முருகப்பெருமானுக்கு விரதம் இருந்து வழிபாடு செய்தால் பல நன்மைகள் உண்டாகும் என்று கூறப்படுகிறது.

அந்நாளில் ஆலயத்திற்கு அபிஷேகங்கள் நடைபெறும்பொழுது சென்று வழிபட வேண்டும்.

அவ்வாறு வழிப்படும்பொழுது அபிஷேகத்திற்காக தங்களால் இயன்ற பொருட்களை வாங்கி தருவது என்பது சிறப்பு.

கடன் சுமையை தீர்க்க உதவும் முருகன் பரிகாரம் | Kadan Theera Murugan Abisegam

அதில் பாலபிஷேகம் செய்யும்பொழுது அபிஷேகம் செய்த பாலில் இருந்து சிறிதளவு எடுத்து வீட்டிற்கு வர வேண்டும்.

இப்படி வீட்டிற்கு வந்ததும் அதில் சிறிதளவு தண்ணீர் கலந்து வீடு முழுவதும் தெளிக்க வேண்டும்.

இப்படி செய்வதன் மூலம் முருகப்பெருமானின் அருளால் நமக்கு இருக்கக்கூடிய கடன் பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும் என்று கூறப்படுகிறது.

கடன் பிரச்சினை தீர்வதற்குரிய வருமானம் நம்மை வந்து சேரும் வாய்ப்புகள் உண்டாகும்.   

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். 


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US