நீ எதிரில் வர எதிர்காலம் பொன்னாகும்
கோமாதா எனப்படும் பசுவை வணங்கினாலும் அதற்கு உணவு கொடுத்தாலும் எதிரே வந்தாலும் பல நன்மைகள் உண்டாகிறது. அதை பற்றி பார்ப்போம்.
அதாவது , கோமாதாவை ஒரு முறை வலம் வந்தால் உலகத்தை சுற்றிய புண்ணியம் கிடைக்கிறது.
அதற்கு பூஜை செய்தால், பிரம்மா விஷ்ணு சிவன் ஆகியோரை வணங்கிய பலன் உண்டாகிறது.
கோமாதாவுக்கு புல், பழம், அகத்திக்கீரை கொடுத்தால் நம் பாவங்கள் அனைத்தும் தீர்கின்றது.
பசுக்கள் மேய்ந்து விட்டு வீடு திரும்பும் மாலைப்பொழுதில் கோதூளி லக்னம் எனப்படும். இந்நேரம் மகாலட்சுமி வரும் நேரம் ஆகும்.
அப்போது அவற்றின் குளம்படியில் இருந்து கிளம்பும் புழுதி நமது உடலில் பட்டால் புண்ணிய ஸ்நானம் செய்வதற்கு சமமாகிறது.
இந்த தூசியை எடுத்து பூசிக்கொண்ட அரசர்கள் ரகு தசரதர் ஆவார்.
மா என்ன பசு கத்தும் ஓசை மங்களத்தை தரும். பசு இருக்கும் இடத்தில் மந்திர ஜெபம் தர்ம செயல்களை செய்தால் 100 மடங்கு பலன் கிடைக்கும் என்கின்றனர்.
எமதூதர்கள் பசுவின் கண்களுக்கு மட்டுமே தெரிவார்கள். மேலும் ,பசு இருக்கும் இடத்தை சுற்றி நல்ல அதிர்வலைகள் இருந்து கொண்டிருக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |