108 ஏகாதசி விரதம் இருந்த பலனளிக்கும் கைசிக ஏகாதசி
விரதங்களில் மிகவும் சக்தி வாய்ந்த மற்றும் முக்கியமான விரதமாக ஏகாதசி விரதம் இருக்கிறது. அந்த வகையில் கார்த்திகை மாதம் வளர்பிறையில் வருகின்ற ஏகாதசியை கைசிக ஏகாதசி என்று சொல்வார்கள். இந்த ஏகாதசி அன்றுதான் யோக நித்திரையில் இருந்து பெருமாள் கண் விழித்ததாக சொல்லப்படுகிறது.
இன்றைய தினத்தில் உப்பு இல்லாமல் விரதம் கடைபிடிப்பவர்கள் 108 ஏகாதசியில் விரதம் இருந்த பலனை பெறுவார்கள் என்பது ஐதீகம். அதாவது பழம், பால், பயத்தம் கஞ்சி சாப்பிட்டு பகவானை பிரார்த்தனை செய்வது இந்த நாளில் அவர்களுக்கு ஒரு மிகப்பெரிய நல்ல பலன்களை பெற்றுக் கொடுக்கும்.

அது மட்டுமில்லாமல் இன்றைய நாளில் எவர் ஒருவர் துளசி செடிக்கு முன்பாக தீபம் ஏற்றி வழிபாடு செய்கிறார்களோ அவர்களுடைய பாவங்கள் யாவும் விலகும். மார்கழி மாதத்தில் வரக்கூடிய ஏகாதசியை வைகுண்ட ஏகாதசி திருநாளாக கொண்டாடப்படுகிறது.
இதே போல் கார்த்திகை மாதம் வரக்கூடிய ஏகாதசியை கைசிக ஏகாதசி என்று கொண்டாடுகிறார்கள். மேலும், நெல்லை மாவட்டத்தில் திருக்குறுங்குடி என்னும் தலம் இருக்கிறது. இங்கு அருள் பாலித்து வரும் அழகிய நம்பியாரை முற்காலத்தில் நம்பாடுவான் என்ற பக்தர் பயபக்தியோடு வணங்கி வந்தான்.
ஒரு நாள் ராட்சசு ஒன்று அவரை சாப்பிடுவதற்காக நெருங்கியது. அந்த நேரத்தில் அவர் அந்த ராட்சசுவிடம் கொஞ்சம் பொறு, நான் கோவில் சென்று பெருமாளை சேவித்து பின்பு உன்னிடம் வந்து விடுகிறேன். பிறகு என்னை உணவாகக் கொள் என்று நம்பாடுவன் சொல்லி இருக்கிறார் . சொன்னது போலவே இவரும் கோவிலுக்கு சென்று திரும்புகிறார்.

ராட்சசு அருகில் வருகிறார் தன்னை சாப்பிடுமாறு வேண்டுகிறார். ஆனால் அந்த ராட்சசு இவரது நேர்மையாளும் பக்தியாலும் சாப விமோசனம் பெற்று மனிதனாக மாறியது. இந்த வரலாற்றை நினைவு கூறும் வகையில் கைசிக ஏகாதசி திருநாள் கொண்டாடப்படுகிறது.
இந்த விழா திருக்குறுங்குடி, நான்குநேரி, ஸ்ரீரங்கம் போன்ற குறிப்பிட்ட சில தலங்களில் மட்டுமே கொண்டாடப்படுகிறது. கூடுதலாக இன்று இரவு சிலர் நம்பாடுவான் போன்றும் ராட்சசு போன்றும் வேடம் அணிந்து கைசிகப் புராணத்தை நடித்து காண்பிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |