துரோகம் செய்பவர்களிடம் இருந்து காக்கும் மகா காளி
காளி என்றாலே உக்ரமானவள், அவளை வழி பட பெரும்பாலும் அஞ்சுவார்கள்.
உண்மையில் காளி தேவியை வழிபட்டால் எத்தனை நன்மைகள் அருளிச்செய்கிறாள் என்று பார்க்கலாம்.
இலக்கண நூலிலும் கலிங்கத்து பரணியிலும் காளி வழிபாடு வெற்றிக்குறியாக பிராத்தனையாக சொல்லப்பட்டதை நாம் கவனிக்க வேண்டும்.
மேலும் ஆகம கிரந்தகளில் காளி தேவியைப் பற்றி பல தியானங்கள் இருக்கின்றன.
அவற்றில் பத்ரகாளி தியானம் அனைவராலும் சொல்லப்படுகிறது. மேலும் காளியை மனம் உருகி வழிபடுபவர்களுக்கு இன்பம், துன்பம், அறம், அன்பு, வெறுப்பு, அழகு, கோரம், அதர்மம் என்று அனைத்தையும் ஒன்றாகவே பாவிக்க தோன்றும்.
காளி வழிபாடு ஒருவரது உடலில் பயத்தை நிக்கி மனோ தைரியத்தை கொடுக்கும். மேலும் காளியின் அருளை பெற்றதால் தான் மஹாகவி காளிதாசன் குமார சம்பவம், ரகுவம்சம், மேகசந்தேசம், சாகுந்தலம் போன்ற அமரகாவியம் இயற்றமுடிந்தது.
காளி பூஜையை வீட்டில் செய்வதற்க்கு முன்
சில பக்த்ரகள் காளிக்கு உகந்தது என்று தவறாக மாமிசம் போன்றவற்றை படைக்கின்றனர். ஆனால் உண்மையில் காளி வழிபாடு தொடங்கப்பட்ட ஹர்ஷ்வர்தனர் காலத்திலும் சரி மகரிஷிகளின் சக்தி தத்வ நூல்களிலும் சரி மாமிசை படையல் குறித்து எதுவும் சொல்லப்படவில்லை.
காளியின் பக்த்ர்கள் மனம் உருகி ஒரு வேண்டுதலை வைக்க அதை உடனே நிறைவேற்றி வைப்பாள்.
கண்டிப்பாக காளியின் பக்தர்களை எந்த துயரத்திலும் எந்த துரோக சூழ்ச்சியிலும் காளி தேவி சிக்கவைக்காமல் காப்பாற்றுகிறாள்.
காளி பூஜை செய்யும் முறை
அமாவாசை அன்று மாலையிலோ, வெள்ளிக்கிழமை திங்கள்கிழமை அன்றோ சதூர்த்தி திதி நாளிலோ காளியை வழிபடுவது நல்லது.
அஷ்டமி, நவமி, சிவராத்திரி, பரணி நட்சத்திர தினங்களில் வழிபடுவது கூடுதல் சிறப்பு.
நாம் உடலில் நரம்பு மண்டலத்துக்கு அதிபதியாக திகழும் காளி தேவியை வழிபட்டால் எதிர்ப்புகள் எல்லாம் இல்லாமல் போவதுடன் எண்ணிய எண்ணங்கள் நிறைவேறி சந்தோஷ வாழ்க்கை அமையும்.