கண் திருஷ்டி விலக ஆடி அமாவாசை அன்று வீட்டில செய்யவேண்டியவை
இந்த உலகத்தில் மிக கொடியதில் ஒன்று கண் திருஷ்டி.அதாவது கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்பார்கள்.அப்படியாக ஒவ்வொரு மனிதனுடைய கண் பார்வையும் நல்ல விதமாக இருக்கும் என்று சொல்ல முடியாது.
அந்த திருஷ்டியால் பல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது.அந்த வகையில் அந்த திருஷ்டியை நீக்க ஆடி அமாவாசை அன்று நாம் என்ன செய்யவேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.
ஆடி பெருக்கு மறுநாள் ஆடி அமாவாசை அந்த நாளில் வீட்டில் கோலம் போடக்கூடாது.ஏனென்றால் அந்த நாளில் நாம் முன்னோர்களை நினைத்து திதி கொடுப்பது வழக்கம்.
சிலர் வழக்கமாக வீட்டில் வாயிற்படியில் ஒரு எழுமிச்சை பழத்தை இரண்டாக பிரித்து அதில் ஒரு பாதி மஞ்சளும் மறு பாதி குங்குமமும் வைத்து வாசலில் வைக்க வீட்டிற்குள் வரும் எதிர்மறை எண்ணங்களை எல்லாம் அது உள்வாங்கிக்கொள்ளும்.
பிறகு நாளை மாலை 6:00 மணிக்கு மேலாக குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் அழைத்து கிழக்கு பார்த்தவாறு அமரவைத்து கொண்டு வீட்டிற்கு மூத்தவர்களாக இருப்பவர்கள் ஒரு எலுமிச்சம் பழத்தை கையில் எடுத்துக் கொண்டு அதை நான்கு பாகங்களாக வெட்டிக் கொள்ளவேண்டும்.
அதை முழுமையா பிரித்து விடக்கூடாது.பிறகு எலுமிச்சம் பழத்தை முக்கால் பாகம் வெட்டி அது நான்காக பிரிந்து இருக்க வேண்டும்.
பிரித்த எழுமிச்சை பழத்தை நடுவே கொஞ்சமாக கல் உப்பு, குங்குமம், அதன் மேலே 3 மிளகு மட்டும் வைத்து இந்த எலுமிச்சம்பழத்தை குடும்ப உறுப்பினர்களை சுற்றி ஒரு பேப்பரில் வைத்து மடித்து குப்பை தொட்டியில் அல்லது ஊருக்கு ஒதுக்குப்புறமாக போட்டு விட வேண்டும்.
குப்பைத்தொட்டியில் போட்டு குப்பை தொட்டியை வீட்டுக்குள்ளேயே வைத்துக் கொள்ளக் கூடாது. எதிர்மறை ஆற்றல் வீட்டுக்குள்ளேயே சுற்றும்.
ஆகவே குப்பை கூடையை எடுத்து வெளியில் வைத்து விடுங்கள். எவ்வளவு எளிமையான கண் திருஷ்டியை வீட்டில் இருந்து நாம் எடுத்து விடலாம்.
ஆக மறக்காமல் இது செய்து பல துன்பங்களில் இருந்து நம்மை காப்பாற்றி கொள்ளவேண்டும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |