திருஷ்டி விலக நாளை(29-03-2025) அமாவசை அன்று செய்யவேண்டிய பரிகாரம்
பொதுவாக அமாவசை என்றாலே மிகவும் சக்தி வாய்ந்த தினமாக பார்க்க படுகிறது. அன்றைய தினம் குலதெய்வம் கோயில்களுக்கு சென்று வழிபாடு செய்வது என்பது சிறந்த பலன் கொடுக்கும். அப்படியாக நாளை 29-3-2025 சனிக்கிழமையோடு சேர்ந்து அமாவாசை திதி வருவது சிறப்புக்குரிய விஷயம் ஆகும்.
இந்த நாளில் தான் சூரிய கிரகணமும் நடக்க உள்ளது. அதோடு நாளை தான் சனிப்பெயர்ச்சியும் நடக்க உள்ளது. இதனால் நாளை வரும் அமாவசை மிகவும் சிறப்பு வாய்ந்ததாக சொல்லப்படுகிறது. இந்த அற்புத நாளில் நாம் சில பரிகாரங்கள் செய்ய அதீத பலன்களை பெறலாம்.
உலகத்தில் பிறந்த உயிர்களில் அனுபவிக்ககூடாத துன்பமாக இந்த கண்திருஷ்டி இருக்கிறது. இந்த கண் திருஷ்டியானது ஒரு மனிதனை மிக பெரிய பாதிப்புகளை அடைய செய்யும். இந்த கண் திருஷ்டியால் குடும்பங்களில் சில பாதிப்புகளை உண்டாக்க செய்யும். சிலருக்கு உடல் உபாதைகள் ஏற்படலாம்.
இவர்களுக்கு நல்ல தீர்வாக அமாவசை நாளில் பரிகாரம் செய்வது சிறந்த பலன் கொடுக்கும். இவர்கள் அமாவசை நாளில் இரவு நேரத்தில் இந்த விளக்கு ஏற்றினால் போதுமானது. நாம் அனைவரும் ஊமத்தங்காய் பற்றி கேள்வி பட்டு இருப்போம்.
அந்த ஊமத்தங் காயை இரண்டாக வெட்டி, உள்ளே இருக்கும் விதைகளை எல்லாம் நீக்கிவிட்டு, அதை விளக்கு போல தயார் செய்து கொள்ளுங்கள். பிறகு, அதில் நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு, தீபம் ஏற்றி வரவேற்பு அறையில் ஒரு மணி நேரம் எரியவிட்டால் போதும்.
வீட்டை பிடித்த கண்திருஷ்டி தரித்திரம் கெட்ட சக்தி அனைத்தும் எல்லாம் விலகிவிடும். இவ்வாறு தொடர்ந்து செய்ய நம் வீட்டில் உள்ள கண் திருஷ்டிகள் எல்லாம் விலகுவதோடு நம்மை மீண்டும் நெருங்காது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |