சனி பெயர்ச்சி 2025: மார்ச் 29 பிறகு அமோகமான வாழ்க்கை யாருக்கு?
திருகணிதமுறைப்படி 29.03.2025 அன்று சனி பெயர்ச்சி நடக்கவுள்ளது. ஆனால் வாக்கியபஞ்சாங்கப்படி 6.03.2025 அன்று சனிப்பெயர்ச்சி நடக்கவுள்ளது. இந்தப் பெயர்ச்சியில் சனிபகவான், பூரட்டாதி நட்சத்திரம் 3-ம் பாதம் கும்பம் ராசியில் இருந்து, பூரட்டாதி நட்சத்திரம் 4-ம் பாதம் மீனம் ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார்.
மீன ராசி குருவின் வீடு ஆகும். சனிபகவான் மீன ராசியில் அடுத்த இரண்டரை ஆண்டுகாலம் இருக்க உள்ளார். இந்த மாற்றத்தால் அனைத்து ராசிகளுக்கும் பலவிதமான நிகழ்வுகள் நடக்கும் என்றாலும் குறிப்பிட்ட 4 ராசிகளுக்கு சிறப்பான வாழ்க்கை அமைய போகிறது அதை பற்றி பார்ப்போம்.
மிதுனம் :
மிதுன ராசிக்கு சனி பெயர்ச்சி வேலையில் சிறந்த மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொடுக்கப்போகிறது. இவர்கள் இந்த காலகட்டத்தில் சந்தோஷமாகவும் உற்சாகமாகவும் காணப்படுவார்கள். மனதில் நிம்மதி பிறக்கும். இவர்களுக்கு இந்த நேரத்தில் துர்கை அம்மன் வழிபாடு சிறந்த பலன் கொடுக்கும்.
கடகம் :
கடை ராசிக்கு சனி பெயர்ச்சி சொந்த வாழ்க்கையில் சந்தோஷம் வழங்கும். நீண்ட நாட்களாக உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று எண்ணியவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் நல்ல வளர்ச்சி உண்டாகும். இவர்கள் ஆலங்குடி திருத்தலம் சென்று வருவது, வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை கொடுக்கும்.
துலாம்:
துலாம் ராசிக்கு சனிப்பெயர்ச்சி வாழ்க்கையில் நல்ல மாற்றமும் முன்னேற்றமும் வழங்கும். ஒரு சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் தேடி வரும். உயர் அதிகாரிகள் உங்கள் திறமைக்கு பாராட்டுக்கள் தெரிவிப்பார்கள். உங்கள் வாழ்க்கையின் துணையின் உடல் நலம் சீராகும். இவர்கள் திருநாகேஸ்வரம் சென்று வருவது நல்ல மாற்றத்தை கொடுக்கும்.
மகரம்:
மகர ராசிக்கு சனிப்பெயர்ச்சி பலன் பதவி உயர்வை கொடுக்க போகிறது. சோம்பல் நீங்கி சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். நீங்கள் செய்யும் காரியங்களில் வெற்றிகள் கிடைக்கும். உங்கள் பேச்சுக்கு வீட்டில் உள்ள நபர்கள் மதிப்பும் மரியாதையும் வழங்குவார்கள். உங்கள் வாழ்வு இன்னும் வளமாக ஒருமுறை வைத்தீஸ்வரன் கோவில் சென்று வருவது நல்ல மாற்றத்தை கொடுக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |