நம் கனவில் காவல் தெய்வம் வந்தால் என்ன பலன்
நாம் தினம் இரவு தூங்கும் பொழுது கனவுகள் வருவது இயல்பு.வரும் கனவை தடுப்பதற்கு எந்த மருந்தும் இல்லை.
அப்படியாக ஒவ்வொரு மனிதர்க்கும் தான் இயல்பு வாழ்க்கையை மீறிய கனவுகள் வருவதுண்டு. அப்படி வரும் கனவுகளுக்கு என்ன பலன் என்று பார்ப்போம்.
காவல் தெய்வங்களை கனவில் கண்டால், சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும், எதிர்பாராத அதிர்ஷ்டம் ஏற்படும் என்று பொருள்.
காவல் தெய்வங்கள் என கூறினால், மாரியம்மன், திரௌபதி அம்மன், சுடலை முத்து, கருப்பசாமி, காத்தவராயன், முனியாண்டி, சொரிமுத்து, பிலாவடி, மாடன், வீரன் இப்படிப் பல காவல் இருக்கிறார்கள் இவர்கள் யார் வந்தாலும் நன்மையே நடக்கும்.
நம் கனவில், அழுவது அல்லது கடவுளிடம் மன்றாடுவதை போல் வந்தால் சில இக்கட்டான சூழ்நிலைகள் ஏற்படப்போகிறது என்று அர்த்தம்.
அதுமட்டும் அல்லாமல் , நீங்கள் கஷ்டப்படும் போது கடவுளை நம்பியதாகவும், எல்லாம் கிடைத்த பிறகு அவரை மறந்து விட்டதையும் குறிக்கும்.
மேலும், நீங்கள் ஒரு இரக்கமுள்ள நபர், தேவையில்லாதவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுகிறீர்கள், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தொண்டு செய்வீர்கள் என்பதையும் குறிக்கும்.
ஒருவர் கனவில் துர்கா தேவி சிவப்பு நிற உடையில் காணப்பட்டால், உங்கள் வாழ்க்கையில் ஏதாவது மங்களகரமான நிகழ்வு நடக்க போகிறது என்று அர்த்தம்.
நீங்கள் இருக்கும் துறையில் உங்கள் வாழ்க்கை பிரகாசிக்கப்போகிறது என்பதை குறிக்கிறது. அது குடும்ப வாழ்க்கையாக இருந்தாலும் சரி, தொழிலாக இருந்தாலும் சரி.
ஆனால் துர்கா தேவியோடு கர்ஜனை செய்யும் சிங்கத்தைக் கண்டால், அது ஏதோ பிரச்னை வருவதைக் குறிக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |